Politics | அரசியல்
வடக்கன் வந்தா தப்பா? கொதிக்கும் ரங்கராஜ் பாண்டே
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தந்தி டிவியின் தலைமை பத்திரிகையாளராக இருந்து சில காரணங்களால் வெளியேற்றப்பட்டு தனியாக சாணக்யா என்ற youtube சேனலை நடத்தி வருகிறார்.
இந்த youtube சேனலில் நேற்று அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாற்றி வந்த ஓர் அர்ச்சகரின் மகன் ஆவார். பாண்டே அவர்களின் பூர்வீகம் ஒரிசா ஆகும். இவர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்து பல ஆண்டுகள் ஆகிய நிலையில் முழுமையாக தமிழ் பேச கற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் முக்கியமான சேனல்களில் ஒன்றான தந்தி டிவியில் வேலைக்கு சேர்ந்து அதில் தலைமை பத்திரிகையாளராக உயர்ந்தார்.
அவர் தந்தி டிவியில் நடத்திய கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியின் மூலம் பல அரசியல் தலைவர்களை தனது கிடக்கு பிடி கேள்வி மூலம் பேட்டி கண்டு தமிழ்நாட்டில் பிரபலமானார்.
பின்பு தந்தி டிவியில் இருந்து சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து வெளியேறியவர் மற்ற சேனல்களில் வேலை செய்யாமல் தானே சொந்தமாக சாணக்யா என்ற youtube சேனலை தொடங்கினார்.
இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான வட இந்தியர்கள் வந்து இறங்குவது சமூகத்தில் ஒரு பதற்றத்தை உருவாக்கிய நிலையில் அதை விமர்சித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களும் பல கவன ஈர்ப்பு பேச்சுக்களை பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தனது youtube சேனலில் வடக்கன் வந்தா தப்பா? என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
அதில் வடக்கர்கள் தமிழ்நாட்டில் வந்த இறங்குவதை எதிர்ப்பவர்கள் தமிழர்கள் கர்நாடகாவிலும் மகாராஷ்டிரா மும்பையிலும் குடியேறிய போது அதைப் பற்றி பேசாதது ஏன் என ஆவேசமாக பேசியுள்ளார்.
இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுபோல அரசியல் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.