Connect with us

கழுத்தில் உத்திராட்சத்துடன் சீமான் – என்ன இப்படி மாறிட்டார்

ntk, Seeman

Politics | அரசியல்

கழுத்தில் உத்திராட்சத்துடன் சீமான் – என்ன இப்படி மாறிட்டார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இயக்குனராக இருந்து பின்பு திராவிடர் கழகம் திராவிட தமிழர் பேரவை போன்ற திராவிட சித்தாந்த இயக்கங்களுடன் இணைந்து பல மேடைகளில் கடவுள் மறுப்பு கொள்கையையும் பெரியாரிய சித்தாந்தத்தையும் பேசி வந்தவர்.

2009 இலங்கை இன அழிப்பு படுகொலைக்கு பின்பு சீமான் அவர்கள் தனியாக கட்சி தொடங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்த திராவிட அரசியலை எதிர்த்து பல மேடைகளில் பேசி வருகிறார்.

அதில் தமிழர் சமயங்களான சைவம் வைணவம் போன்ற மதங்களே தமிழர்களின் மதங்கள் தமிழர்கள் இந்துக்கள் இல்லை என பேச தொடங்கினார்.

ஒரு பக்கம் திராவிடத்தை எதிர்த்து கொண்டு இன்னொரு பக்கம் இந்துத்துவாவையும் எதிர்த்துக்கொண்டு தமிழர் மதம் சைவம் தமிழர்கள் முன்னோரை வழிபடும் நடுகல்மரபினர் என தங்களது கொள்கையை பேசி வருகிறார்.

இதை ஒரு பக்கம் திராவிட அரசியல் செய்பவர்களும் பிஜேபி இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அரசியல் செய்பவர்களும் எதிர்த்து வருகின்றனர்.

சீமான் அவர்கள் வீர தமிழர் முன்னணி என்ற மற்றொரு அமைப்பையும் நடத்தி வருகிறார். அது பிஜேபிக்கு ஆர்எஸ்எஸ் போன்று நாம் தமிழர் கட்சிக்கு வீரத்தமிழர் முன்னணி என்ற ஓர் பண்பாடு சார்ந்த பரப்புரை செய்யும் அமைப்பாகும். அந்த அமைப்பு குலதெய்வ வழிபாட்டு மாநாடு போன்ற பல மாநாடுகளை முன்னெடுத்துள்ளது. மேலும் திருமுருகப் பெருவிழா என முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு முன்பும் மாநாடுகளை நிகழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் பெரியாரியம் பேசிய சீமான் அவர்கள் தன் கழுத்தில் தங்கச் செயினில் இணைக்கப்பட்ட உத்திராட்சத்தை அணிந்திருப்பது திராவிடம் பேசும் கடவுள் மறுப்பாளர்களுக்கு பேசு பொருளாகியுள்ளது.

அவர் ருத்ராட்சம் அணிந்துள்ள அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுபோல சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளை பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top