Connect with us

இது தோல்வி அல்ல வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம் – செல்லூர் ராஜூ

sellur k raju

Politics | அரசியல்

இது தோல்வி அல்ல வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம் – செல்லூர் ராஜூ

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணத்தை வைத்து திமுக  வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் அதிமுக கழக வளர்ச்சி பணி குறித்து கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். அதன்படி, மதுரை மாவட்ட அளவில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

அதிமுகவை பார்த்து முதலமைச்சர் பயந்துள்ளார். கடந்த 28 நாட்கள்  அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பொது மக்களை கூடாரங்கள் அமைத்து காலையிலும், மாலையிலும் அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளும் காலையில் ரூபாய் ஆயிரம் மாலை ரூபாய் ஆயிரம் என வழங்கினர்.

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன் கறி, கோழிக்கறி வாங்கி கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். பணத்தை வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியில் கூறியுள்ளார், அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மோசடி தேர்தல் நடைபெற்றுள்ளது. திமுகவின் திருமங்கலம் ஃபார்முலா தாண்டி ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலா என்று மாறும் அளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கொண்டாடும் அளவுக்கு இங்கு எதுவும் நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையம் திமுகவிற்காகவும், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் துணை நின்றது. இது என்னுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இது தோல்வி அல்ல வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளோம். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது போன்ற சுவாரசியமான அரசியல் தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் படியுங்கள்.

 

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top