Politics | அரசியல்
பாஜக பாமக இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் – திருமா சூளுரை
பாஜகவை கண்டித்து சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்க பாஜக முயற்சிப்பதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.
அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை நடைபெறுவதாகவும், இது செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை சீர்குலைக்கும் நோக்கத்தில் இருப்பதாகவும் திருமாவளவன் எம்.பி. இந்த வன்முறைக்கு தமிழக பா.ஜ.க தலைவர்களின் பேச்சுகள் காரணமாக உள்ளது என்றார்.
திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சுற்றி வளைத்து மிரட்டியதால் தமிழகத்தில் காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார். இதனால் தமிழகத்தில் காவல்துறை உண்மையில் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம். மேலும் இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு பலம் வாய்ந்த அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே போல 2009இல் இலங்கை இனப்படுகொலை நிகழ்ந்த போது திருமாவளவன் அவர்கள் காங்கிரஸ் உடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என சூளுரைத்தார். அந்தக் கருத்தை விடுதலைக் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டாரா என எதிர்க்கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதே போல போன தேர்தலுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் நல கூட்டணி என ஒரு கூட்டணியை உருவாக்கி திமுக அதிமுகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என பேசி வந்தாரே அந்த சூழலை என்னவாயிற்று என அரசியல் கருத்தாளர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது போன்ற சுவாரசியமான பல தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!