மிஷ்கின் கண்டெடுத்த பொக்கிஷமான பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) மும்பையில் பிறந்து வளர்ந்து 2012ல் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.
அதன் பிறகு அவரது திரைப்படங்கள் பெரிதாக பேசும்படியாக அமையவில்லை.பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அங்கு ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் – இளையதளபதி விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’பீஸ்ட்’.
ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சார்கார் திரைப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம், பீஸ்டையும் தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் சுமார் 2 கோடி ரூபாய் பெற்று வந்த அவருக்கு பீஸ்ட் படத்தில் 3.5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த அவர், அதன்பிறகு தெலுங்கு திரையுலகுக்கு சென்றார்.
பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்த பூஜா ஹெக்டே, தெலுங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு திரும்பிய அவர், பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லையாம். விஜய் படம் என்றவுடன் ஓகே சொன்ன அவருக்கு, இவ்வளவு தொகை சம்பளமாக கிடைத்ததையடுத்து மகிழ்ச்சியுள்ளாராம்.
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஓவர் கவர்ச்சி ஏதும் காட்டாமல் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.