நடிகை பூஜா ராமச்சந்திரன் ( Pooja Ramachandran ), வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, மாடல், நடிகை, என திறமையை மெருகேற்றிகொண்டவர்.தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்கமுடியவில்லை என்றாலும், ‘பீட்சா’, ‘களம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காஞ்சனா 2 ‘ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழை தவிர தெலுங்கிலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள, ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார்.
ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார்.
இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது.
திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய வொர்க் அவுட் மற்றும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளத்தையே தெறிக்க விட்டு வந்தனர்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் படிக்கட்டில் படுத்தபடி டாப் ஆங்கிளில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.