தமிழில், நெஞ்சிருக்கும் வரை, பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உட்பட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை பூனம் கவூரை ( Poonam Kaur ) பார்த்தவுடன் அடையாளம் காணமுடிவது நெஞ்சிருக்கும் வரை படத்தில் தான், அந்த அளவிற்கு அப்படத்தில் உண்மையான காதலியாக தன் காதலை வெளிப்படுத்தியிருப்பார்.
தெலுங்கு நடிகையான பூனம் மலையாளம் , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை ஆதலால் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
கல்லூரியில் படிக்கும் போதே படவாய்ப்பு கிடைக்க தனது 20 வயதில் மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.பிறகு 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.
அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் என் தமிழ் படங்களில் நடித்தார். அழகு புதுமையான முகபாவனை கொண்டிருந்தாலும் தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இந்நிலையில், பட வாய்ப்புக்காக கடற்கறைமணலில் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.