இப்படி இருந்தால்.. படுக்கையறை காட்சியில் நடிப்பேன்.. – நடிகை பூர்ணிமா ரவி ஓப்பன் டாக்..!

 நடிகை பூர்ணிமா ரவி இணைய பக்கங்களில் வரக்கூடிய கேளிக்கை வீடியோக்கள் youtube வீடியோக்கள் போன்றவற்றில் தோன்றி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் திரைப்படங்களில் ரொமான்ஸ் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இருக்கிறது.

அப்படியான காட்சிகள் உங்களுக்கு அமைந்தால் அதில் நீங்கள் நடிப்பீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை பூர்ணிமா ரவி ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் அது கதையின் ஓட்டத்துடன் ஒன்றி இருக்க வேண்டும். திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது.

அதே சமயம் அது அதில் நடிக்கக்கூடிய நடிகர்களை மோசமானவர்கள் என்று காட்டி விடக்கூடாது. ஒரு காதல் காட்சி அதனை தொடர்ந்து வரக்கூடிய முத்த காட்சிகள் படுக்கை அறை காட்சிகள் போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் படுக்கையறை காட்சி வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வம்படியாக திணிப்பது போல இருக்க கூடாது.

அதற்கும் மேல் இன்னொரு விஷயம் இருக்கிறது. இப்படியான காட்சிகளில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகரின் தனிப்பட்ட விஷயம்.

ஏனென்றால் காதல் காட்சிகள் வருகிறது.. அதனுடன் சேர்ந்து இயல்பாக இப்படியான ரொமான்ஸ் காட்சிகளில் அவரால் நடித்து விட முடியும் என்றால் மட்டுமே அந்த காட்சி சிறப்பாக வரும்.

காதல் காட்சிகள் நடிக்க வரும்.. ஆனால் படுக்கை அறை காட்சிகளில் நடிக்கும் பொழுது அவர் கஷ்டமாக உணர்கிறார் என்றால் அது சரியாக இருக்காது.

அதற்கு ஒரு அனுபவம் தேவை. தற்போது என்னிடம் அந்த அனுபவம் கிடையாது. அந்த அனுபவத்தை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இப்படியான வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என்று தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார் நடிகை பூர்ணிமா ரவி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …