‘பூவே உனக்காக’ தொடர் மூலம் பல ரசிகர்களைப் பெற்றிருப்பவர் ராதிகா ப்ரீத்தி. ‘யாரது?’ என்று கேட்பது கேட்கிறது. இந்த மெகா தொடரில் பூவரசியாக நடித்து வருபவர்தான் ராஷிகா. ஓராண்டுக்கும் மேலாக சுட செய்தும், ஒளிபரப்ப முடியாமல் இருந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது இந்த சீரியல்.
சீரியலில் சேலையில் மட்டுமே தோன்றினாலும், உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு இவங்க. விதவிதமான, மாடர்ன் உடையில் மஜாவாக வெளியிட்டு வருகிறார்.
கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் தான் பூவராசி பிறந்து வளர்ந்த ஊர். தேசிய அளவிலான த்ரோ பால் விளையாட்டு வீரரான இவருக்கு, தன்னுடைய பத்தாம் வகுப்பின்போது திரையில் நடிகையாகவேண்டும் என்று தோன்றியதாம்.
அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் கன்னட திரைப்பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. ஆசை நிறைவேறப்போகிறது என்கிற சந்தோஷத்தில் வாய்ப்பினை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஏதோ காரணத்தினால் திரைப்பட சுட பாதிலேயே கைவிடப்பட, சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார்.
சீரியலில் புடவை சகிதமா தோன்றும் இவர் பார்பதற்கு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. இந்நிலையில், மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.