” சூப்பரான உருளைக்கிழங்கு கிரேவி..!” – தோசைக்கு தொட்டுக்கொள்ள செமத்தியான டிஷ்..!

குழந்தைகள் எப்போதும் உருளைக்கிழங்கு பிரியர்களாகவே இருக்கிறார்கள். உருளைக்கிழங்கில் எந்த பதார்த்தங்களை செய்தாலும் பட்டு என்று சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை கொண்டு தோசை மற்றும் சப்பாத்திக்கு அவர்கள் விரும்பும் படியான ஒரு சைடு டிஷ் சூப்பரான முறையில் செய்யலாம். அதற்கு தான் உருளைக்கிழங்கு கிரேவி என்று பெயர்.

potato gravy

இந்த உருளைக்கிழங்கு கிரேவியை வெறும் 10 நிமிடத்தில் நீங்கள் செய்து முடித்து விடலாம். அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

1.உருளைக்கிழங்கு 5 வேக வைத்தது

2.சீரகம் 1/4 டீஸ்பூன்

3.பட்டை ஒன்று

---- Advertisement ----

4.கிராம்பு ஒன்று

5.ஏலக்காய் ஒன்று

6.பிரிஞ்சி இலை ஒன்று

7.பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது

8.இஞ்சி பூண்டு விழுது

9.தனியா தூள்

10.மிளகாய் தூள்

11.கரம் மசாலா தூள்

12.மஞ்சள் தூள் தேவையான அளவு

13.உப்பு தேவையான அளவு

14.எண்ணெய்

15.தக்காளி இரண்டு

16.கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி

செய்முறை

potato gravy

முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு நன்கு கழுவி அதை குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை அடுத்து உருளைக்கிழங்கு கிரேவியை தாளிக்க நீங்கள் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி விடுங்கள்.

 எண்ணெய் சூடான பிறகு சீரகம், பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை இவற்றை போட்டு தாளித்து விடுங்கள். இதனோடு நீங்கள் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் கருவேப்பிலை இரண்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதினை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்குங்கள்.

இவை நன்கு வதங்கியதும் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பழம் விழுதை சேர்த்து வதக்கி விடுங்கள். இப்போது இதனோடு தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

potato gravy

இப்போது நீங்கள் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து பொடியாக்கி இந்த கலவையில் போட்டு நன்கு கிளறி தேவையான அளவு உப்பு மற்றும் நீரை விட்டு விடவும்.

மேலும் கூடுதல் சுவையாக இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் பத்து முதல் 15 வரை முந்திரிப் பருப்புகளை மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக தண்ணீர் விட்டு டேஸ்ட்டாக அரைத்து இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு, காரம் சரியாக இருக்கிறதா? என்று பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். இது தான் சுவையான உருளைக்கிழங்கு கிரேவி.

---- Advertisement ----