6000 பேர் அப்ளே பண்ணுனாங்க.. உதவி இயக்குனர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா.. ப்ரதீப் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்..!

6000 பேர் அப்ளே பண்ணுனாங்க.. உதவி இயக்குனர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா.. ப்ரதீப் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்..!

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக ஆவதன் மூலமாக பிறகு இயக்குனராகி தமிழில் பெரிய உயரத்தை தொட முடியும் என்பதே பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இதனாலேயே உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தால் உடனே சென்று விடுகின்றனர்.

ஆனால் சினிமா எவ்வளவு மோசமானது என்று ஒரு பக்கம் பலரும் சினிமா குறித்து பேசி வருகின்றனர். கனவுகளுடன் சினிமாவிற்கு வந்தாலும் கூட வேறு ஒரு தொழிலை பார்த்துக் கொண்டுதான் சினிமாவில் முயற்சி செய்ய வேண்டும்.

ப்ரதீப் ரங்கநாதன்

இல்லை என்றால் சினிமாவே அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்று சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரே கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோ ஒன்று இளைஞர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் அமைந்திருக்கிறது.

6000 பேர் அப்ளே பண்ணுனாங்க.. உதவி இயக்குனர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா.. ப்ரதீப் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்..!

பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறார்.

6000 பேர் அப்ளே பண்ணுனாங்க

இதனை தொடர்ந்து தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அடுத்து இவர் தொடர்ந்து நடிகராக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கோமாளி திரைப்பட படப்பிடிப்பிற்கு பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அதில் பிரதீப் ரங்கநாதன் கூறும்பொழுது கோமாளி திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தை நான் இயக்குவதற்கு எங்கிருந்து உதவி இயக்குனர்களை பிடிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

6000 பேர் அப்ளே பண்ணுனாங்க.. உதவி இயக்குனர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா.. ப்ரதீப் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்..!

எனவே அதனை தொடர்ந்து நான் ஒரு போஸ்டரை வெளியிட்டேன். அதில் உதவி இயக்குனர்கள் வேலைக்கு தேவை என்று போட்டு அவர்களது ரிஸ்யூமை அனுப்ப சொல்லி கூறி இருந்தேன். ஆனால் அப்பொழுது 6000 பேர் எனக்கு ரிஸ்யூம் அனுப்பினார்கள்.

ஷாக் நியூஸ்

அதில் 50 பேரை மட்டும் செலக்ட் செய்து அவர்கள் அனைவரையும் நேர்காணல் செய்தோம். அதில் 15 பேரை தேர்ந்தெடுத்தோம். இந்த 15 பேரையும் தேர்ந்தெடுக்க சில தகுதிகளை வைத்திருந்தேன். அதில் முதல் தகுதி அவர்கள் யாருக்குமே ரெக்கமண்டேஷன் வந்திருக்கக் கூடாது.

ஏனெனில் நான் உதவி இயக்குனராக சென்ற பொழுது பலரும் என்னிடம் கேட்ட முதல் விஷயம் எதாவது இருக்கிறதா? என்றுதான் எனவே எந்த வித பின்புலமும் இல்லாத ஆட்களைதான் உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த பேட்டியில் முக்கிய விஷயம் என்னவென்றால் சினிமா துறையில் 6000 பேர் உதவி இயக்குனர்களாக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான். ஆனால் இந்த 6000 பேரும் இயக்குனர்களாவது கிடையாது. இந்த ஒரு விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அளவிற்கு சினிமாவில் உதவி இயக்குனர்களில் போட்டிகள் இருக்கிறதா என்று பேசப்பட்டு வருகிறது.