நடிகை பிரகதி ( Pragathi Mahavadi ) 1994ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் “வீட்ல விசேஷங்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, நடிகை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜயகாந்துடன் “பெரிய மருது”, பாண்டியராஜனுடன் “சும்மா இருங்க மச்சன்”உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்திய நாட்களில், அவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனின் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
உதயநிதியின் “கெத்து”, சசி குமாரின் “தார தப்பட்டை”, சந்தானத்தின் “இனிமே இப்படித்தான்” ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக இருக்கிறார்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். மேலும் அவர் தான் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.
இதனால் நாளுக்கு நாள் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், தன்னுடைய யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில், தற்போது புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊம்.. சொல்றியா மாமா.. ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா.. பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல ஆட வேண்டிய பாட்டா மேடம் இது..? என்று வினா எழுப்பி வருகிறார்கள்.