பிறப்பின் அடிப்படையில் அனைத்தையும் அனுபவிப்பதே உதயநிதி தான்..! – சகுனி பட நடிகை பிரணிதா சுபாஷ் கருத்து..!

பிறப்பின் அடிப்படையில் அனைத்தையும் அனுபவிப்பதே உதயநிதி தான். ஆனால், அவர் பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது என பேசிக்கொண்டு சனாதன எதிர்ப்பு என பேசுவது அதிர்ச்சியாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார் சகுனி பட நடிகை பிரணிதா சுபாஷ்.

நடிகரும் மற்றும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை அமைச்சருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர். சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற கொடிய நோய்கள் போன்றது. அதனை எதிர்க்க கூடாது. அழித்துவிட வேண்டும் என்று பேசி இருந்தார்.

இந்த பேச்சுக்கு நாடு முழுதும் எதிரான குரல்களும், ஆதரவான குரல்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிரபல நடிகை பிரணிதா சுபாஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அங்கே பெரும்பான்மையான இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களுடைய கோயில்களை திருத்தலங்களை காக்கும் பணிக்காக எவ்வளவோ செலவு செய்கிறார்கள். காணிக்கை செலுத்துகிறார்கள். தங்களுடைய மதம் சார்ந்த அனைத்து பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

ஆனால் அதே தமிழ்நாட்டில் தான் இது போன்ற சனாதன ஒழிப்பு பற்றிய பேச்சை ஒரு முதலமைச்சரின் மகனால் பேச முடிகிறது. பிறப்பால் வரக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்க வேண்டும் என்று பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் பிறப்பால் வந்த அனைத்து விஷயங்களையும் சுகபோகமாக அனுபவித்துக் கொண்டிருப்பவரே உதயநிதி ஸ்டாலின் தான்.

மறைந்த முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்களின் பேரன், முதலமைச்க்கர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் அவர் அனைத்து அரசு மற்றும் கட்சி பதிவுகளையும் எளிமையாக பெற்றிருக்கிறார்.

இப்படி பிறப்பின் அடிப்படையில் வந்த அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு பிறப்பால் ஏற்ற தாழ்வு கற்பிக்க கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே இந்த பேச்சை தமிழ்நாட்டில் பேசுகிறார் என்றால் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

நன்றி – இந்தியா டுடே

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …