இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது.

10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபல நடிகர் அல்லது நடிகை புகைப்படத்தை வெளியிட்டு அவர் யார் என கண்டுபிடிப்பது, சினிமா ரசிகர்களுக்கும் சற்று சுவாரசியமான விஷயமாகதான் இருக்கிறது.

இதில் சிலரது முகம், சின்ன வயதில் இருப்பதற்கும் இப்போது இருப்பதற்கும் தெள்ளத் தெளிவாக முக அடையாளம் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் சிலரது முகம் கண்டே பிடிக்க முடியாக அளவுக்கு சிறுவயதில் ஒருமுகம், இப்போது ஒரு முகம் என அப்படியே மாறியிருக்கும்.

சிறு வயது புகைப்படங்கள்

சமீபத்தில் பிக்பாஸ் ஜிபி முத்து சிறுவனாக இருந்த புகைப்படம் வெளியாகி வைரலானது. அதேபோல் விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சூர்யா போன்ற பலரது சிறுவயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அந்த வகையில் இப்போது நடிகர் பிரசாந்த் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. ஆனால் இப்போதைய பிரசாந்த், புகைப்படத்தில் உள்ள சிறுவயது பிரசாந்த், அடையாளமே தெரியவில்லை என்பதுதான் உண்மை.

வைகாசி பொறந்தாச்சு

வைகாசி பொறந்தாச்சு படம் மூலம், கடந்த 1990களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் பிரசாந்த். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்தது பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பிறகு மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடி படம், பிரசாந்த் நடிப்புக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில், உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க டாப் ஸ்டாராக மாறினார் பிரசாந்த்.

இதையும் படியுங்கள்:  மாயாவின் பாலினம் இது தான்.. எதற்கு மறைகிறார் என தெரியவில்லை.. திருநங்கை பகீர் தகவல்..

பார்த்தேன் ரசித்தேன்

கண்ணெதிரே தோன்றினாள் படம், பிரசாந்துக்கு பெரிய வெற்றியை தந்தது. பார்த்தேன் ரசித்தேன் படமும் ஹிட் கொடுத்தது.

இப்படி சினிமாவில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பிரசாந்துக்கு, அவரது திருமண வாழ்க்கை பயங்கர சரிவை ஏற்படுத்தியது. நடிகர் தியாகராஜன் மகனான இவர், கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

கிரக லட்சுமி

பெண் பார்த்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த அரேன்ஜ்டு மேரேஜ் என்ற நிலையில், குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பித்தார். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே கிரகலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்ற குண்டு வெடித்தது.

அதன்பிறகு போலீஸ், கோர்ட், வழக்கு என பல சிக்கல்கள் ஏற்பட்டதால் நடிப்பில் இருந்து சற்று விலகினார் பிரசாந்த். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து அவர் சினிமாவுக்குள் வந்த போது அவருக்கான இடம் காணாமல் போயிருந்தது.

முக்கிய இடத்தில் இருந்திருப்பார்

அவர் மட்டும் தொடர்ந்து நடித்து இருந்தால், இன்று அஜீத், விஜய் இடத்தில் பிரசாந்தும் ஒரு முக்கிய நடிகராக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

ரீ என்ட்ரி

இப்போது மீண்டும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் மூலம் ரீ என்ட்ரி தந்திருக்கிறார் பிரசாந்த். விரைவில் அவர் ஹீரோவாக நடித்த அந்தகன் என்ற படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: மாரிமுத்து இறந்தது இயற்கை அல்ல.. இதனால் தான் இறந்தார்.. குண்டை தூக்கி போட்ட ட்ரெண்டிங் சாமியார்..!

இந்த சூழலில் நடிகர் பிரசாந்தின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் பிரசாந்தை பார்த்து, அட ஜீன்ஸ் படத்துல நடிச்ச பிரசாந்தா இது என ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.