கையில ஆவார்டு.. நாக்கை துருத்தி கூல் போஸ் கொடுத்துள்ள பிரவீனா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

விஜய்டிவியின் ராஜா ராணி2 சீரியலில் ஸ்டிரிக்ட்டான மாமியாராக நடித்து வருபவர் சிவகாமி. இவரது நிஜப் பெயர் பிரவீனா நாயர். கேரள மாநிலம் செங்கணசேரியில் பிறந்தவர். மலையாளத்தில் பிரபலமான நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட். அப்பா கல்லூரி பேராசிரியர்.

பிரவீனா 18 வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற படம் மூலம் அறிமுகமானார். தூர்தஷன் நிகழ்ச்சியான ஸ்வப்த ஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

தொடர்ந்து ராஜதந்திரம், கலியூஞ்சல்,அக்னிசாட்சி, இங்கிலீஷ் மீடியம், வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும், ஸ்வர்ணம், மயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.மலையாள சினிமாவில் அனில் பாபுவின் கலியூஞ்சல் படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஓரல் மாத்திரம் தி ட்ரூத் மற்றும் எழுப்புண்ணா தரகன் ஆகிய படங்களில், மம்மூட்டியின் சகோதரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரவீணா. சினிமாவில் நடித்துக்கொண்டே சின்னத்திரையிலும் அறிமுகமானார் பிரவீனா.

மலையாளத்தில் ஸ்வப்னம், மேகம் தி மவுனம், மழவில் மனோரமாவில் மலக்கமர் மற்றும் மொக்கக்கடல் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். கைராலி டிவியில் மம்மி & மீ, ஆசியநெட்டில் நகைச்சுவை நட்சத்திரங்கள் மற்றும் ஸ்டார் சிங்கர் உள்ளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார்.

இவர் முதன் முதலில் தமிழ் சின்னத்திரையில் கலைஞர் டிவியின் நம்ம குடும்பம் தொடர் மூலம் தான் அறிமுகமானார். அதன்பிறகு விஜய்டிவி, சன்டிவியில் ஏராளமான சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

சன்டிவியின் பிரியமானவளே சீரியலில் இவர் நடித்திருந்தது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் இவர் இணையத்தில் இளம் நடிகைகளுக்கு நிகராக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் கொண்ட இவர் தற்போது கையில் விருதுடன், நாக்கை துருத்தியபடி சில கூல் போஸ்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயதிலும் இம்புட்டு இளைமையா..? என்று ஷாக் ஆகி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …