மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு வரவேற்பு என்பது மிக எளிதாக நடிகைகளாக வரும் பெண்களுக்கு கிடைப்பது கிடையாது. ஏனெனில் நடிகர்களை விடவும் பெண்களுக்கான போட்டி என்பது சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது.

பெரும்பாலும் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்குதான் சினிமாவில் நடிப்பதற்கான முன்னுரிமை கிடைக்கிறது. அதையும் தாண்டி இப்பொழுது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துவிடுகின்றனர்.

மேக்கப் இல்லாம நடிப்பீங்களா?

இதனால் சின்ன ஆர்டிஸ்ட்களில் துவங்கி கதாநாயகி வரையிலும் பெண்களுக்கு அதிக போட்டிகள் இருந்து வருகின்றன. அதே சமயம் ஆண்களை பார்க்கும் பொழுது ஆண்களுக்கு மாடலிங் துறைபோல ஒரு போட்டியான துறை எதுவும் இல்லை.

அதனால் அவர்கள் வெளியில் இருந்து வாய்ப்பு தேடி உள்ளே வந்தாலும் கூட மிக எளிதாக வாய்ப்புகளை பெற்று விட முடிகிறது. அந்த வகையில்தான் நடிகர் கவின் மிக எளிதாக சினிமாவில் வாய்ப்பை பெற்றார். ஆரம்பத்தில் சின்ன திரையில் விஜய் டிவியில் வரவேற்பு பெற்று வந்தார் கவின்.

மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். அதற்கு பிறகு சில தொடர்களில் நடித்து பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வரவேற்பை பெற்ற கவின் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

சினிமாவில் நடித்த படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தன. இறுதியாக அவர் நடித்த ஸ்டார் திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் அதிக பிரபலமானார்.

பிரீத்தி முகுந்தனுக்கு ஸ்டார் திரைப்படம்தான் முதல் திரைப்படம் ஆனாலும் கூட அந்த ஒரு திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து விட்டது. பெரும்பாலும் நடிகைகளுக்கு முதல் திரைப்படம் இப்படியான வரவேற்பு பெற்று தருவது கடினமான விஷயமாகும்.

கலகலப்பான பேட்டி

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் பேசிய பிரீத்தி முகுந்தன் நிறைய சர்ச்சையான விஷயங்களை பேசி அந்த பேட்டியை கலகலப்பாக மாற்றி இருந்தார். அதில் அவரிடம் மேக்கப் போடாமல் படப்பிடிப்பில் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா? என்று தொகுப்பாளர் கேட்டதும் அவரிடம் நீங்கள் ஆடை எதுவும் அணியாமல் நிகழ்ச்சியை தொகுக்க சொன்னால் தொகுப்பீர்களா? என்று நக்கலாக கேள்வி கேட்டிருக்கிறார் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.

மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

அதற்கு ஷாக் ஆன தொகுப்பாளர் அப்படியே நான் தொகுத்து வழங்கினாலும் அதை யார் பார்க்க முடியும் என்று பதில் அளித்து இருந்தார். மேலும் உங்கள் வீட்டில் உங்கள் அப்பாவின் பாக்கெட்டில் இருந்து திருடி இருக்கிறீர்களா என்று அவரிடம் கேட்ட பொழுது எங்க அப்பா கம்மியா தான் காசு வைத்திருப்பார். அதனால் நான் பீரோவில் இருந்து எடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். இப்படி முதல் படம் முடிந்த உடனே அவர் கொடுத்திருக்கும் பேட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அதிக வரவேற்பை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.