இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

தமிழ் திரை உலகில் இசைக் குடும்பமாக விளங்கும் இசைஞானி இளையராஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது தம்பி மகன் பிரேம்ஜி ஒரு மிகச்சிறந்த நடிகராகவும் இசை அமைப்பாளராகவும் விளங்குகிறார்.

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

இவர் நடித்த திரைப்படங்களில் காமெடியாக வந்து கலக்கி சிங்கிள் பசங்க வேதனையை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுத்திய பிரேம்ஜி சிங்கிளாக திரிந்ததை அடுத்து அண்மையில் கால் கட்டை போட்டுக் கொண்டார்.

இப்பத்தான் கல்யாணம் ஆச்சு..

அட இவருக்கு எந்த வயதில் கல்யாணமா? என்று ஆச்சரியப்பட்ட ரசிகர்களின் ஏகோபித்த வாழ்த்துக்களோடு பெரியவர்கள் நிச்சயம் செய்து, தான் காதலித்த பெண்யை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

திருமணம் முடிந்த கையோடு Instagram பக்கங்களில் தனது மனைவியோடு இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தினம் தினம் பதிவிட்டு ட்ரெண்டிங் ஆகிவிடுவார்.

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

மேலும் பிரேம்ஜி தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததோடு இவர் பேசிய என்ன கொடும சார் என்ற வசனம் இன்று வரை இளசுகளின் மத்தியில் பேமஸ் ஆக உள்ளது.

45 வயதை தொட்டிருக்கும் பிரேம்ஜி 25 வயதான இந்துவை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களது வயது வித்தியாசத்தை கோடிட்டு காட்டி இணையங்களில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளி வந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அதுக்குள்ள பிரேம்ஜி வீட்டில் விசேஷம்..

இந்நிலையில் பிரேம்ஜி திருமணத்திற்கு பிறகும் அதே ஜாலி மூடில் தான் இருக்கிறார் என்பதை உணர்த்தக்கூடிய வகைகளில் வெளி வந்த புகைப்படங்களை பார்த்து திருமணம் ஆனாலும் பயபுள்ளைக்கு அதே குசும்பு இன்னும் போகல என்ற கருத்துக்களை ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்று மாதம் முடிவடைந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் தற்போது அவர்கள் வீட்டில் நடந்து முடிந்துள்ளது. இந்த விசேஷத்தை தான் பிரேம்ஜி மனைவி இந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

அது மட்டுமல்லாமல் இந்த வீடியோவிற்கு கேப்சனாக முருகப்பெருமானால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குகிறோம். அன்பு விசுவாசம் மற்றும் அவருடைய இறைவனின் பாதுகாப்போடு ஒவ்வொரு அடிகளும் நாம் தயாராக இருக்கிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே திருத்தணி முருகன் கோயிலில் வைத்து தான் இவர்களது திருமணம் நடந்தது என்பதால் அந்த முருகனை எல்லாவற்றிலும் மறக்காமல் துணையாக வைத்து ஒவ்வொரு முறையும் இவர் பதிவிடுகின்ற பதிவுகள் ரசிகர்களை குஷியில் தள்ளி உள்ளது.

மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ளே பிரேம்ஜி வீட்ல விஷேசம்..!

இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதுதான் வீட்ல நடந்த விசேஷமா என்று ஆச்சரியத்தோடு புகைப்படத்தை பார்த்து வருவதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதை அடுத்து நல்ல விஷயத்தை காதில் கேட்பதற்காக தயாராகி வருவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் அந்த விசேஷத்தையும் இன்ஸ்டாகில் பதிவிட்டு எங்களை குஷிப்படுத்துங்கள் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.