ஒன்றிணைந்த சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ்..! – எப்படின்னு பாருங்க..!

 டாக்டர் மற்றும் டான் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் சிவகார்த்திகேயன் தற்போது மற்றும் மாவீரன் படத்தில் மிக விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் பிரின்ஸ் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பாடல் பட்டையைக் கிளப்பியதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தோடு அந்த படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

 மேலும் தற்போது நடித்து வரும் மாவீரன் படமும் இதே போல மாஸ் வசூலை குவிக்கும் என்பதால்  படப்பிடிப்புக்கு முன்பே இந்த படத்தின் பிசினஸ் மிகவும் சூடுபிடித்து உள்ளது. அந்த வகையில் இந்த படமானது ஓடிடி யில் விற்க போட்டா போட்டியில் இறங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த படமானது முப்பத்தி நான்கு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.இதனை இந்த விலைக்கு வாங்கிய நிறுவனம் பிரைம் அமேசான் ஆகும்.

 இதனைப் போலவே மறுபடியும் ஒரு தரமான சம்பவத்தை பிரைம் அமேசான் நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. அது மேலும் தற்போது தனுஷ் நடித்து வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை அடுத்து இவரின் படமான கேப்டன் மில்லர் படத்தை கைப்பற்றியது தான் அந்த சம்பவம். வரும்  செப்டம்பர் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு கடும் போட்டியை தரும் என நினைத்து இவரின் அண்ணன் செல்வராகவன் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தை வெளியிட இருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்றால் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மிக சீரிய முறையில் வசூலை வாரிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பல கோடி ரூபாய்களை பேரம் பேசி கேப்டன் மில்லத் படத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதற்காக எந்த நிறுவனம் முதலீடு செய்த தொகை முப்பத்தி எட்டு கோடிகள் ஆகும். சிவகார்த்திகேயனின்  மாவீரன் படத்தையும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தையும் கைப்பற்றிய சந்தோஷத்தில் இருக்கும் அமேசான் இந்த இரண்டு படங்களையும் தங்களது தளங்களில் வெளியிட்டு மாபெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தும் என்று திரைத் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …