அரை லிட்டர் பால் இருந்தால் போதும்.. ஆஹா ரெசிபி..! – வாங்க பாக்கலாம்..!

பிரினி ( Pirini Recipe ) எல்லோரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளில் ஒன்று. இது பெரும்பாலும் வட இந்தியர்களால் அதிகமாக விரும்பி சாப்பிடப்படுகிறது.

சிறிய சைஸ் மண் பானையில் வைத்து குளுகுளுவென்று சாப்பிடக் கொடுப்பார்கள். பொதுவாக கடைகளில் வாங்கி சாப்பிடும் இந்த குளுகுளு மண் பானை பிர்ணியை வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம்.

இதிலுள்ள அளவுகள் மூலம் செய்யும் போது மூன்று பேருக்கு பரிமாறலாம். ( Serving Count : 3 )

தேவையான பொருட்கள் :

  1. 1/2 லிட்டர் பால்
  2. 1 கப் இலேசாக தூளாக்கப்பட்டவை அரிசி
  3. சீனி – தேவையான அளவு
  4. கோயா – தேவையான அளவு
  5. உதிர்ந்த பாதாம் – தேவையான அளவு
  6. குங்குமப்பூ – தேவையான அளவு
  7. சில்வர் வார்க் – தேவையான அளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். அதில் சிறிது குங்குமப்பூவும் சேர்த்து பால் திக்காகும் வரை கொதிக்க விட வேண்டும். பால் திக்கானதும் அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். குறைந்தது 8 -10 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.

இப்போது சர்க்கரை சேர்க்காத கோயா மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளற வேண்டும். திக்காக ஆரம்பிக்கும் கட்டிகள் வராமல் கைவிடாமல் கிளற வேண்டும். இப்போது சுவைக்குத் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டு மிதமான தீயில் வேகவிடவும்.

திக்காக திக்கான பாத்திரத்தின் அடியில் அடி பிடிக்க ஆரம்பிக்கும். கை விடாமல் கிளற வேண்டும்.

பாத்திரத்தில் திரண்டு பிரினி பதத்துக்கு வந்த பிறகு, அடுப்பை அணைத்து விட்டு குளிர வையுங்கள். இப்போது இதை சின்ன மண் பானைகளில் போட்டு மேலே அலுமினியம் ஃபாயில் பேப்பர் போட்டு மூடி ப்ரிட்ஜில் ஃப்ரீசரி்ல வைத்து விடுங்கள். சாப்பிடும் போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து பரிமாறலாம்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …