பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரியா பவானி சங்கர் மீடியா மீதான ஆர்வத்தில் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆனார். அதன் பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஸ்டார் ஆன்கராக வலம் வந்த பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.ஒரே சீரியலில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியா பவானி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல நடிகை என்று பெயர் பெற்றார். இதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.
லோ ஹிப்ல அது தெரியுற அளவுக்கு..
படத்திலும் பிரியா பவானி சங்கர் நன்றாகவே நடித்திருந்தார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து சமீபத்தில்பேட்டி ஒன்றில் பேசிய அவர், ” என்னுடைய வரம்பு என்ன என்று எனக்கு தெரியும். எனக்கு பொருத்தமான கதைகளில் மட்டுமே நான் நடிப்பேன். எந்த கதைக்கு எவ்வளவு கவர்ச்சி தேவை என்பது எனக்கு தெரியும். என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்.
கவர்ச்சி பொம்மையாக வலம் வருவதில் எனக்கு விருப்பமில்லை. ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையை லோ ஹிப்பில் கட்டிக்கொண்டு இடுப்பு தெரியும் அளவுக்கு நடிப்பதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது” என்று கூறியுள்ளார். தற்போது, கசட தபர, வான், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி ஷங்கர் என்பது குறிபிட்டதக்கது.