“இது ஒரு வகையான மனநோய்..” – விஜய் டீவி நிகழ்ச்சி.. விட்டு விளாசிய பிரியா பவானி ஷங்கர்…!

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து இருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டி வெற்றி பெற்றது.

தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து அகிலன் என்ற திரைப்படத்திலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன் என்ற திரைப்படத்திலும் மேலும் நடிகர் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்த திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மட்டுமில்லாமல் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மட்டுமில்லாமல் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது.. தன்னுடைய வாழ்க்கை நிகழ்வுகளை பதிவிடுவது மட்டும் இல்லாமல் சமூக அக்கறை இப்போது இந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

---- Advertisement ----

சில நடிகர்கள் நடிகைகள் குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் இருக்கும்போது கருத்துக்களைத் தாராளமாக தெரிவிப்பார்கள். ஆனால். குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்காமல் அடக்கி வாசிப்பார்கள். அமைதியாகி விடுவார்கள்.

ஆனால் நடிகை பிரியா பவானி சங்கர் இதற்கு விதிவிலக்கு. சமீபத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி குறித்தான தன்னுடைய தன்னுடைய பார்வையை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான நீயா நானா என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். ஒரு படிக்காத கணவனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் படித்த மனைவி தன்னுடைய கணவரை எந்த அளவுக்கு இகழ்வாக பேசினார் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, “ஒருவரை இகழ்ந்து பேசுவது நகைச்சுவை என நினைப்பது ஒருவிதமான மனநோய்.. ஆனால், உங்களுடைய பார்வையும் நேர்மையான பேச்சும் திருப்தியாக இருந்தது கோபி அண்ணா. வெற்றிக்கு இங்கு ஆயிரம் இலக்கணம் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு அப்பா என்றைக்குமே தோற்க முடியாது. தன்னுடைய குழந்தைகளுக்காக ஒவ்வொரு நிமிடத்தையும் தொலைக்கும் அப்பாக்கள் எப்பொழுதும் தோற்க மாட்டார்கள்.. அவருடைய வெற்றியை அங்கீகரிப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..” என்று தன்னுடைய கருத்தை பதிவிட்டிருக்கிறார். இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----