“அதை மட்டும் பாத்துட்டு.. ஒரு முடிவுக்கு வந்துடாதிங்க..” – போட்டு உடைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்துள்ளார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள் மற்றும் தகவல்கள்  குறித்த உண்மை நிலையை நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, சமூக வலைதளங்களில் பிறரது வாழ்க்கை பற்றி புனையப்பட்ட வடிவத்தை தான் சமூக வலைதளங்கள் உங்களிடம் காண்பிக்கும். அதில் நீங்கள் பார்ப்பது எல்லாமே பிறருடைய பயணங்கள், விருந்து நிகழ்ச்சிகளில், வெற்றிகள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நல்ல விஷயமாக மட்டுமே இருக்கின்றன.

அப்படியான கொண்டாட்டங்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு பின்னால் அவர்கள் அனுபவிக்கும் வலி எதுவுமே பதிவு செய்யப்படுவது கிடையாது. எனவே சமூக வலைதளப் பக்கங்களில் வரும் பதிவுகளை பார்க்கும் பொழுது மற்றவர்கள் சிறப்பாக வாழ்வதாகவும் நீங்கள் வாழ்க்கையில் பின்தங்கிப் போனது போலவும் நினைக்க வேண்டாம்.

உண்மையான வாழ்க்கை என்பது வேறு இந்த புகைப்படங்களுக்கு பின்னாலிருக்கும் கதை என்பது வேறு என்று கூறியுள்ளார் பிரியா பவானி ஷங்கர். இவரது, தெளிவான பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

பிரியா பவானி ஷங்கர் நேரடியாக கூற வருவது என்னவென்றால், உங்களுடன் படித்த பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், பணி இடத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் ஆகியோரை உங்களுடைய முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் நீங்கள் அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருப்பீர்கள்.

அவர்கள் புதிதாக வீடு வாங்கி விட்டதாகவும், புதிதாக கார் வாங்கி விட்டதாகவும், நண்பர்களுடன் சுற்றுலா சென்று வந்ததாகவும், அல்லது விலையுயர்ந்த உணவுகளை ஸ்டார் ஹோட்டல்களில் உண்பது போலவும், விமானம் ஏறி வெளிநாடு சென்று அங்கேயே மகிழ்ச்சியுடன் இருப்பது போலவும் புகைப்படங்களை பதிவு செய்வார்கள்

இதனை பார்க்கும் பொழுது அவர்கள் ஜெயித்து விட்டார்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஆனால்,  நாம் இப்படியே இருக்கின்றோம் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை நம்மால் ஏன் இதையெல்லாம் அனுபவிக்க முடியவில்லை என்ற எண்ணம் உங்களுக்குள் எழலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் இப்படி பிறரது சந்தோஷத்தை மட்டும் பார்த்து நம் வாழ்க்கை மீதும்.. நம் மீதும் ஒரு குற்ற உணர்வு ஏற்படலாம். ஆனால் அப்படியான குற்ற உணர்வு கொள்ள தேவையே இல்லை. ஏனென்றால் அவர்கள் அனுபவித்த வலிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எனவே, உண்மையான.. உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள் என்று கூறியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …