“ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – “யாரு இந்த அழகி..” – என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..!

 நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar )  செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த முதல் சீரியலாக இது அமைந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில சீரியல்களிலும் நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்தவகையில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இந்தியன்-2, சேப்டர் 1 போன்ற படங்களில் தனி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இத்திரைப்படங்களுக்கு பிறகு இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்து கூட நடிக்க புக் பண்ணி உள்ளார்கள். அந்த வகையில் தற்போது 10 படங்களுக்கு மேல் பிரியா பவானி சங்கர் கைவசம் வைத்துள்ளார்.

தற்பொழுது இவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அந்த அளவிற்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக மூக்கு குத்தி உள்ளார்.

---- Advertisement ----

இப்புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள ஒரிஜினல் நாட்டு கட்ட என்று வர்ணித்து வருகிறார்கள்.மேலும் ஒரு ரசிகர், யாரு இந்த அழகி..? என்று கமெண்ட் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர் “எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க தாங்க..” என்று கூறியுள்ளார்.

---- Advertisement ----