நீ கழட்டிவிட்டா நான் மருமகன் வீட்டுக்கு போயிடுவேன்... பிரியா பவானி சங்கருக்கு அவர் அம்மா கொடுத்த வார்னிங்..

நீ கழட்டிவிட்டா நான் மருமகன் வீட்டுக்கு போயிடுவேன்… பிரியா பவானி சங்கருக்கு அவர் அம்மா கொடுத்த வார்னிங்..

தொலைக்காட்சி சீரியல் மூலமாக பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர். பெரும்பாலும் சின்ன திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் அதிக பிரபலமான நடிகர்கள் பலர் இருக்கின்றனர்.

ஆனால் நடிகைகளை பொறுத்தவரை சின்ன திரையில் பிரபலமாக இருந்தால் கூட வெள்ளித்திரையில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்குமே தவிர கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

பிரியா பவானி சங்கர்:

அப்படியாகதான் நடிகை பிரியா பவானி சங்கர் வரவேற்பை பெற்றார். எப்பொழுதுமே எல்லா திரைப்படங்களிலும் எளிமையான தோற்றத்தில் நடிக்க கூடியவர் பிரியா பவானி சங்கர். அதிகமான மேக்கப்புகளோ அல்லது விலை உயர்ந்த காஸ்டிம்களோ அணிந்து அவர் நடிப்பதை பார்க்க முடியாது.

நீ கழட்டிவிட்டா நான் மருமகன் வீட்டுக்கு போயிடுவேன்... பிரியா பவானி சங்கருக்கு அவர் அம்மா கொடுத்த வார்னிங்..

இதனாலேயே தமிழ் மக்கள் மத்தியில் மிக எளிதாக இவர் பிரபலம் அடைந்து விட்டார். ஆரம்பத்தில் சின்ன திரையில் தொகுப்பாளராக இருந்து வந்த பிரியா பவானி சங்கர் பிறகு சீரியல்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கினார்.

மருமகன் வீட்டுக்கு போயிடுவேன்

அதன் மூலமாக சினிமாவிற்கும் சென்று அங்கும் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் டிமான்டி காலனி அடுத்த பாகம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் கல்லூரி காலங்களில் இருந்து பிரியா பவானிசங்கர் ராஜு என்பவரை காதலித்து வருகிறார். ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது தன்னுடைய காதலரை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி இருக்கிறார்.

நீ கழட்டிவிட்டா நான் மருமகன் வீட்டுக்கு போயிடுவேன்... பிரியா பவானி சங்கருக்கு அவர் அம்மா கொடுத்த வார்னிங்..

அம்மா கொடுத்த வார்னிங்

அதில் அவர் கூறும் பொழுது ராஜு ஒரு மிகச் சிறந்த மனிதர் நாங்கள் இருவருமே மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் என்று கூறியிருக்கிறார் பிரியா பவானி சங்கர். மேலும் மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து நான் வந்ததனாலேயே சினிமா மற்றும் மீடியா மீது என்னுடைய குடும்பத்தாருக்கும் ராஜிவின் குடும்பத்தாருக்கும் ஒரு அச்சம் உண்டு.

ஆனால் ராஜு எப்போதுமே அப்படி இல்லை. அவர் என்னை பற்றி எல்லோரிடமும் பெருமையாகதான் பேசுவார் ஒருமுறை என்னுடைய அம்மா என்னிடம் நீ மட்டும் ராஜை விட்டுவிட்டு போனால் நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் எனவும் அவருடன் சென்று அவர் வீட்டிலேயே தங்கி விடுவேன் என்றும் கூறினார். அந்த அளவிற்கு என்னை விட ராஜுவை அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.