மனசு வலிக்குது.. மொத்த பழியையும் என் மேல இறக்குறாங்க.. இந்தியன் 2 இதுக்காக தான் நடிச்சேன்.. கதறும் பிரியா பவானி ஷங்கர்..!

மனசு வலிக்குது.. மொத்த பழியையும் என் மேல இறக்குறாங்க.. இந்தியன் 2 இதுக்காக தான் நடிச்சேன்.. கதறும் பிரியா பவானி ஷங்கர்..!

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் பிரியா பவானி சங்கர். கல்லூரி படிப்பை முடித்த கையோடு பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையில் தமிழ் சினிமாவை நோக்கி வந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஆனால் வந்த பிறகுதான் அவர் எடுத்த உடனே சினிமாவில் நடிகையாக முடியாது என்பதை புரிந்து கொண்டார். எனவே அதற்கு முதலில் சின்னத்திரையில் ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கு பெறலாம் என்று நினைத்த ப்ரியா பவானி சங்கருக்கு சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

மேலும் நிறைய பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. இப்படியே சென்று கொண்டிருந்த பொழுது இவருக்கு சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சினிமாவில் வாய்ப்பு:

அவர் நடித்த சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததை அடுத்து சினிமா துறையிலும் வாய்ப்பை பெற்றார் பிரியா பவானி சங்கர். அப்படியாக அவருக்கு முதன்முதலாக மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

மனசு வலிக்குது.. மொத்த பழியையும் என் மேல இறக்குறாங்க.. இந்தியன் 2 இதுக்காக தான் நடிச்சேன்.. கதறும் பிரியா பவானி ஷங்கர்..!

மேயாத மான் திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தார் பிரியா பவானி சங்கர். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியது. பொதுவாக ப்ரியா பவானிசங்கரை பொறுத்தவரை நிறைய விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் அவர் நடிப்பார்.

வழக்கமான நடிகைகள் போல அவர் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டார். பாடல் காட்சிகளில் கூட நெருக்கமான காட்சிகள் இருந்தாலும் நடிக்க மாட்டார். இப்படி எல்லாம் நிறைய விதிமுறைகளுக்கு கீழ்தான் நடித்து வருகிறார்.

படத்தில் தோல்வி:

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் இவரும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிதாக வெற்றியை பெறவில்லை அதனை தொடர்ந்து தற்சமயம் டிமான்டி காலனி 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இந்த படத்தின் பிரமோஷனுக்காக அவர் பேட்டி அளிக்கும் போது இந்தியன் 2 குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் என்றால் அது இந்தியன் 2 திரைப்படம்தான்.

எப்பொழுதுமே மக்கள் என்னை விமர்சனம் செய்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. நீங்கள் ஒரு ஹீரோவுடன் சேர்ந்து ஆடினால் தான் ஹீரோயின் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. எனக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் நான் அதில் நடிப்பேன் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும்தான் அது பாதிக்கும்.

மனசு வலிக்குது.. மொத்த பழியையும் என் மேல இறக்குறாங்க.. இந்தியன் 2 இதுக்காக தான் நடிச்சேன்.. கதறும் பிரியா பவானி ஷங்கர்..!

இந்தியன் 2 திரைப்படம் சரியில்லை என்றதும் என்னை கேலி செய்கிறார்கள் அது எனக்கு வலியை ஏற்படுத்தியது. இந்தியன் 2  திரைப்படம் உண்மையிலேயே தோல்வி அடையும் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தாலும் கூட நான் அந்த படத்தில் நடித்திருப்பேன். ஏனெனில் சங்கர் சார், கமல் சார் இவர்கள் இருவருடன் ஒரு படத்தில் பணிப்புரிய எனக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரிய பாக்கியமாகும்.

அதை நான் எதற்காகவும் கைவிட விரும்பவில்லை எனது திரைப்படங்கள் வெற்றியடைந்தால் அதற்காக என்னை யாரும் பாராட்டுவது கிடையாது ஆனால் தோல்வி அடைந்தால் மட்டும் என் மீது பழியை போடுகிறார்கள் என்று கூறுகிறார் பிரியா பவானி சங்கர்.