“ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – சிலுசிலு காற்றில் கிளுகிளு போஸ் கொடுத்துள்ள ப்ரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya BhavaniShankar ) செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்.

இவர் நடிப்பில் வெளிவந்த முதல் சீரியலாக இது அமைந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில சீரியல்களிலும் நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் ’மேயாத மான்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, குருதி ஆட்டம், ருத்ரன், திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

அவரது பிறந்த நாளையொட்டி தனது சமகவலைதளத்தில் ஒரு புகைப்படத்துடன் வாழ்த்து செய்தியும் வெளியிட்டுள்ளார்.அதில், ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாயாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

எப்போதுமே புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி ,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும்.

அதனால் தான் இதனை பதிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர். மட்டுமின்றி, கையில், புத்தகம், பக்கத்தில் காபி கப், சிலுசிலு காற்றில் குட்டியான இடுப்பு தெரிய லோ ஆங்கிளில் கிளுகிளு போஸ் என சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …