அப்பா இறப்பு, சிறுவயதில் கொடுமை, காதல் திருமணம், விவாகரத்து – பாக்கியராஜ் தங்கை ரேணுகா வாழ்க்கை..!

சின்னத்திரையில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பிறகு சீரியல் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் பிரியதர்ஷினி கடந்த 1978 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர்.

சென்னையில் வளர்ந்து தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர் நடிகர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான தாவணிக் கனவுகள் என்ற திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி. சிறு வயதிலேயே தன்னுடைய தந்தை இறந்துவிட்டாலும் அவர் கூறிய வாழ்க்கை நெறிகளை தற்போதும் கடைப்பிடித்து வருகிறாராம்.

நாங்கள் இப்போது வசதி வாய்ப்புடன் இருக்கிறோம். ஆனால், என் தந்தை இறக்கும் போது அவர் அணிந்து கொள்ள ஒரு நல்ல சட்டை கூட இல்லை. அதை கூட வாங்கி தரமுடியாத நிலையில் இருந்தோம் என கண்கலங்கி பேசியுள்ளார் நடிகை பிரியதர்ஷினி.

தங்களுடைய சிறுவயதில் இப்படியான கொடுமைகளை அனுபவித்திருந்தாலும் கலைத்துரை மீது இருந்த ஆர்வம் இவருக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுத்திருக்கிறது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது மீடியாவை சேர்ந்த ரமணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய தங்கையான திவ்யதர்ஷினி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார்.

அடுத்த சில வருடங்களில் பிரியதர்ஷினி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற வதந்திகள் இணையத்தில் பரவியது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய துறையில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியதர்ஷினி.

தற்பொழுது, எதிர்நீச்சல் என்ற சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி.

எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதாபாத்திரமும் இவர் பேசும் விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இவருடைய உண்மையான பேசும் விதம் என்பது வேறு. ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசக்கூடிய விதம், ஸ்லாங் இவருடைய அப்பாவுடைய பேச்சு நடை என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த இவருடைய தந்தை வீட்டில் பேசக்கூடிய ஸ்லாங்கில் தான் சீரியலில் பேசிக் கொண்டிருக்கிறார் பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …