முன்னணி நடிகைகள் பணம் குடுத்து இதை பண்றாங்க.. புட்டு புட்டு வைத்த பிரியாமணி.. காரி துப்பும் ரசிகர்கள்..

முன்னணி நடிகைகள் பணம் குடுத்து இதை பண்றாங்க.. புட்டு புட்டு வைத்த பிரியாமணி.. காறி துப்பும் ரசிகர்கள்..

தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார் பிரியாமணி. தமிழில் அவரது முதல் படம், கண்களால் கைது செய். அதன்பிறகு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படம்தான் அவருக்கு பிரபலத்தை தேடித் தந்தது.

பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் பிரியாமணி வாழ்ந்திருப்பார்.

பிரியாமணி

பள்ளி மாணவியாக, பருத்திவீரன் கார்த்தியை பிரியாமணி காதலிப்பதும், தனது அப்பா பொன்வண்ணன் அடிக்கும் போது, எதிர்த்து நின்று வாக்குவாதம் செய்வதும் உணர்வு பூ்ரவமாக இருக்கும்.

பொன்வண்ணனிடம் அடிவாங்கி விட்டு பின் தட்டு நிறைய கறி சோறு தின்பதும், ‘அடிவாங்குறதுக்கு ஒடம்புல தெம்பு வேணா’ என்று கேட்டு அழுவதும், பிரியாமணியின் நடிப்புக்கு சிறு உதாரணங்கள்தான்.

தேசிய விருது

இப்படி படம் முழுக்க, சிறப்பான அவரது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் பிரியாமணி.

தொடர்ந்து தமிழில் மலைக்கோட்டை, தோட்டா, அது ஒரு கனாக்காலம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் நடித்தார்.

ஜவான்

பாலிவுட்டிலும் காலடி பதித்த பிரியாமணி, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்திலும் நடித்திருந்தார். இப்போது புஷ்பா 2 படத்தில், பிரியாமணி நடித்திருக்கிறார்.

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் செய்யும் ஒரு தில்லுமுல்லு பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிரியாமணி.

பப்பராஸி புகைப்படக் கலைஞர்கள்…

அதாவது பாலிவுட் சினிமா உலகில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் ‘பப்பராஸி’ புகைப்படக் கலைஞர்களை ஏர்போர்ட், ஷூட்டிங் ஸ்பாட், ஜிம் போன்ற இடங்களுக்கு வரவழைக்கின்றனர்.

அங்கு தங்களை புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி விடுகின்றனர் என்ற உண்மையை, நேர்காணல் ஒன்றில் போட்டுடைத்து இருக்கிறார் பிரியாமணி.

ஏஜன்சிகளிடம் தகவல்

பாலிவுட்டில் உள்ள சில நடிகைகள், தாங்கள் செல்லும் இடங்கள் குறித்து குறிப்பிட்ட ஏஜன்சிகளிடம் முன்னதாகவே சொல்லி விடுவர். அவர்கள் சொன்ன தகவல்படி அந்த ஏஜன்சி, தங்களது புகைப்பட கலைஞர்களை அந்த இடங்களுக்கு அனுப்பி புகைப்படம், வீடியோ எடுக்க வைத்து விடுவர்.

பின்னர் அந்த புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஏதேச்சையாக அங்கு அவர்கள் சென்றது போல, ‘ஸ்பாட்டட்’ என பதிவிட்டு விடுவார்கள்.

என்னிடமும் கேட்டார்கள்

இது அங்கு இப்போது ஒரு டிரண்ட் ஆகவே மாறிவிட்டது. இதற்கு அவர்கள் தரும் விலை அதிகம், விலை குறைவு என்பது பற்றி நான் பேசவில்லை.

என்னிடமும் அதுபோல் செய்து தர வேண்டுமா, என்று கேட்டார்கள். எனக்கு அப்படி ஒரு கவனம் அவசியம் இல்லை. அப்படி ஒரு தேவையும் இல்லை என்று மறுத்து விட்டேன்.

இப்போது இந்த கலாச்சாரம், தென்னிந்திய திரையுலகிலும் வந்துவிட்டது என்று அந்த நேர்காணலில் நடிகை பிரியாமணி கூறியிருக்கிறார்.

காறி துப்பும் ரசிகர்கள்

இந்தியில் ஜவான் ஒரு படத்தில்தான் பிரியாமணி நடிக்கச் சென்றார். அதற்குள் அங்குள்ள பாலிவுட் முன்னணி நடிகைகள் ஏஜன்சிகளுக்கு பணம் குடுத்து, பப்ளிசிடி தேடுகிற விஷயத்தை கண்டுபிடித்து விட்டார்.

அதை பற்றி புட்டு புட்டு வைத்து விட்டார் பிரியாமணி என, இந்தி நடிகைகள் லட்சணம் அறிந்து காறி துப்புகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.