இதெல்லாம் வேண்டாம் செல்லம்.. – பிரியங்கா மோகனை பார்த்து புலம்பும் ரசிகர்கள்..!

டாக்டர் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் இடையே கவனம் ஈர்த்துள்ளார் பிரியங்கா அருள் மோகன் ( Priyanka Arul Mohan ). இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான டான் படத்திலும் அவரே கதாநாயகி.மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அவர் தான் முதல் முதலாக நடித்து இன்னமும் ரிலிஸ் ஆகாமல் இருக்கும் டிக்டாக் என்ற படத்தின் ரிலிஸ் பற்றிய அச்சத்தில் இருக்கிறாராம்.

ஏனென்றால் அந்த படத்தில் அவர் கவர்ச்சியான வேடத்தில் நடித்திருக்கிறாராம். இப்போது அவருக்கு இருக்கும் நல்ல நடிகை என்ற பெயர் அந்த படம் வந்தால் காலியாகிவிடும் என்பதால் அச்சத்தில் உளவுகிறாராம்.

இந்த செய்தி கேள்விப்பட்ட ரசிகர்கள் அந்த டிரைலரை இப்போது இணையத்தில் அதிகமாக தேட ஆரம்பித்துள்ளார்களாம். அதனால் அந்த படத்தின் மீது தனிக்கவனம் விழுந்துள்ளது.அதிலும் ஒரு காட்சியில் டி – ஷர்ட்டை கழட்டுவது போன்ற காட்சிகளிலும் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் பிரியங்கா.

தற்போது இந்த படத்தின் டீசர் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பிரியங்காவை இப்படி கவர்ச்சியாக பார்க்க முடியவில்லை என்று கமெண்டுகளை போட்டு வருகிறர்கள்.மேலும், டாக்டர் படத்தில் இவரை அழகான கியூட்டான கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு இந்த மாதிரி கிளாமர் கதாபாத்திரத்தில் பார்க்க எங்களால் முடியாது.

தயவு செய்து இந்த படத்தை வெளியிடாதீர்கள். ஏன் பிரியங்கா இப்படி செய்தீர்கள், என் மனது உடைந்து விட்டது என்று தாறுமாறாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். தற்போது இந்த டிக் டாக் மூவி குறித்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …