கணவரை பிரிந்த தொகுப்பாளினி பிரியங்கா..? – இது தான் காரணமா.? – குழப்பத்தில் ரசிகர்கள்..!

பொதுவாகவே சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்த விவரத்தை செய்திகள் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருக்கும் சில செய்திகள் கிசுகிசு வதந்தி என்ற அளவிலேயே முடிந்துவிடும். சில செய்திகள் நிஜமாகவே விவாகரத்து ஆகி விட்டது என்ற உண்மையை சேர்க்கும்.

அந்தவகையில், தற்போது நடிகை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக சில கிசுகிசு வெளியாகி இருக்கின்றது.

பிரபல தொகுப்பாளினியான இவர் சமீபத்தில் பிக்பாஸ் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசிவரை பயணித்தார். இரண்டாவது இடத்தையும் பெற்றார்.

இந்த சீசனில் இடம்பெற்ற பல போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொகுப்பாளினி பிரியங்கா தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் சில தகவல்கள் பரவி வருகின்றன.

இத்தனைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட தன்னுடைய கணவர் குறித்து எந்த ஒரு கருத்தையும் அல்லது பேச்சை எடுக்கவே இல்லை பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவிடம் திருமண வாழ்க்கை குறித்து ரசிகர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இருந்த இவர் “உங்களை நன்றாக புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால்… அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால்.. அனைத்தும் சாத்தியமாகும்..” என தெரிவித்திருக்கிறார்.

இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். என்ன காரணத்தினால் இப்படி விரக்தியான ஒரு பதிலை கொடுத்து இருக்கிறார் நடிகை பிரியங்கா தேஷ்பாண்டே என்று பட்டிமன்றமே நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏற்கனவே கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் பிரியங்கா என்ற கிசுகிசுவுக்கு வலுசேர்க்கும் விதமாக பிரியங்காவின் இந்த கருத்து இருப்பதாகவும் சிலர் கூறிவருகிறார்கள் உண்மை என்ன என்று பிரியங்கா தான் கூற வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …