சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகிய அறிமுகமான இவர் தன் நடிப்பால் முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்து, பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பாராட்டை பெற்றார் பிரியங்கா மோகன்.
இவர் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். டான் திரைப்படம் வருகிற மே மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கண்ணு கூசுதே.. என்ன பளபளப்பு.. செம்ம ஹாட்.. – ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் கவர்ச்சி போட்டோஸ்..!
டோலிவுட் நடிகையான பிரியங்கா மோகன், நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது.
முதல் படத்திலேயே தனது அழகால் இளசுகளை சுண்டி இழுத்த பிரியங்காவுக்கு, தனது அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதன்படி தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.
இதுதவிர பாண்டிராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார் பிரியங்கா. அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இணையத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சோஃபாவில் மல்லாக்க படுத்துக்கொண்டு.. தனது கூந்தலை அருவி போல பொழிய விட்டு இளசுகளின் இதயத்தில் அம்பு விட்டுள்ளார்.