மாமனாருக்கு NO.. மருமகனுக்கு O.K.. – ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரியங்கா மோகன்..!

நடிகை பிரியங்கா மோகன் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியிருக்கிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் தனுஷ் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கியது. 1930 40 காலகட்டங்களில் நடப்பது மாதிரியான கதை களத்தில் திரைப்படம் உருவாகிறது.

எனவே, இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்காக நீண்ட தலைமுடி தாடி என ஆளே மாறி உலா வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.

இது தொடர்பான புகைப்படங்கள் கூட சமீபத்தில் இணையத்தில் வெளியானது. மறுபக்கம் தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிரியங்கா மோகன் கூறியதாவது இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் தனுஷ் சாருடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மிகவும் நன்றி படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா மோகனிடம் கேட்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மறுத்துவிட்ட பிரியங்கா மோகன் தற்போது நடிகர் தனுஷ் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …