“நோ டா செல்லம்..” – கவர்ச்சியில் பின்னி பெடலேடுக்கும் பிரியங்கா மோகன் – புலம்பும் ரசிகர்கள்

நடிகை பிரியங்கா மோகன் ( Priyanka Mohan ) கவர்ச்சி உடையில் பின்னி பெடலெடுக்கும் கிளாமர் காட்டி, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டோலிவுட் நடிகையான பிரியங்கா மோகன், நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இவர்கள் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது.

முதல் படத்திலேயே தனது அழகால் இளசுகளை சுண்டி இழுத்த பிரியங்காவுக்கு, தனது அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதன்படி தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் பிரியங்கா மோகன்.

இதுதவிர பாண்டிராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார் பிரியங்கா. அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்படத்தில் ஆதினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா. முதல் பாதியில் துறுதுறுவென இருக்கும் இளம்பெண்ணாகவும், இரண்டாம் பாதியில் துணிச்சலான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த பிரியங்காவும் சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ரசிகர்களை கவரும் விதமாக அதில் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை ஷேர் செய்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்டு வருகிறார் பிரியங்கா மோகன்.

அந்த வகையில் தற்போது லாவண்டர் கலர் மாடர்ன் உடையில் லைட்டாக கிளாமர் காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …