கண்ணு கூசுது செல்லம்.. என்னா பளபளப்பு.. – பிரியங்கா மோகன் போஸ்.. பார்த்து பார்த்து உருகும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை பிரியங்கா மோகன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி வருகிறார். இவர் நடிப்பில் தமிழில் வெளியான டாக்டர் மற்றும் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

பெருவாரியான இளம் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகையாக பிரியங்கா மோகன் திகழ்கிறார். அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய பெயரையும் முகத்தையும் ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்தவர்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியுடன் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

முழு நீள காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் சில முன்னணி கதாநாயகர்களுடன் பிரியங்கா மோகனை ஹீரோயினாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

---- Advertisement ----

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சூரிய ஒளியில் தங்கம் போன்று ஜொலிக்கும் தன்னுடைய முக அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றி உள்ளார்.

அவரை பார்த்த ரசிகர்கள் என்னா பளபளப்பு.. கண்ணு கூசுதே.. என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்

---- Advertisement ----