தமிழில் டாக்டர் தான் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
அந்த பேட்டியில் தொகுப்பாளர் கேள்விக்கு கேட்கக்கூடிய கேள்விக்கு பதில் தர வேண்டும் அல்லது பதில் தர விரும்பவில்லை என்றால் தன் முன்னே வைத்திருக்கக் கூடிய பழ ரசத்தை குடிக்க வேண்டும். இதுதான் அந்த பேட்டியின் விதிமுறை.
விவகாரமான, கோக்கு மாக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்த தொகுப்பாளர் ஒரு கட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் விஜய் இருவரில் யார் சிறப்பாக நடனம் ஆடுபவர் என்று கூறுங்கள் என கேள்வி எழுப்பப்பினார்.
இந்த கேள்வியை கேட்டு அதிர்ச்சியான பிரியங்கா மோகன்.. அய்யையோ.. என்னப்பா இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீங்க.. நான் பேசாம இந்த பழரசத்தை குடித்து விடுகிறேன் என்று கூறி தன் முன்னே வைத்திருந்த பழரசத்தை குடித்து விட்டார்.
அதாவது நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் அல்லது விஜய் இருவரும் இருவரில் யாராவது ஒருவரை இவர் தான் சிறப்பாக நடனமாடுகிறார் என்று கூறுவதால் ஏற்படும் சர்ச்சையை தவிர்க்க இந்த கேள்வியை பதில் சொல்லாமலே கடந்துவிட்டார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.