ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை... நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.

ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.

எம்.ஜி.ஆர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக மக்களுக்கு உதவும் ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் விஜயகாந்த் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் ஆவார். சரத்குமார் சத்யராஜ் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த அதே காலகட்டத்தில் தான் நடிகர் விஜயகாந்த்தும் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

அப்போதைய காலகட்டங்களில் கடுமையான கஷ்டத்தில் இருந்தார் விஜயகாந்த். முக்கியமாக சினிமாவில் வாய்ப்பு தேடும் காலங்களில் வேறு ஏதாவது வேலை தேடிக் கொண்டாலும் கூட வறுமை என்பது கண்டிப்பாக சினிமாக்காரர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.

தடைப்பட்டு போன திரைப்படம்:

அந்த வகையில் விஜயகாந்த்தும் நிறைய வறுமைகளை சந்தித்தார் அப்பொழுதெல்லாம் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். ஒருவேளை உணவு என்பதே ஒரு நாளைக்கு கஷ்டம் என்கிற நிலை அவருக்கு இருந்தது.

ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை... நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.

அதனால் தான் சினிமாவிற்கு வந்த பிறகு சாப்பாடு விஷயத்தில் மட்டும் யாருக்கும் குறை வைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தார் விஜயகாந்த். அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கொடுக்கப்படுவதை உறுதி செய்தவர் விஜயகாந்த்.

ஜோதிகாவால் நடந்த நிகழ்வு:

இறந்த பிறகு அவரது புகழ் பன்மடங்கு அதிகரித்தது என்று கூறலாம். சமூக வலைதளங்கள் முழுக்கவும் விஜயகாந்தின் புகழைதான் பேசி வந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனும் விஜயகாந்த் குறித்து ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

மாணிக்கம் நாராயணன் இப்பொழுது அவ்வளவாக படங்கள் தயாரிப்பதில்லை. அவர் ஜோதிகாவை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்கும் உள்ளதே நடந்த அனுபவங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அதிகபட்சம் அது வேட்டையாடு விளையாடு திரைப்படமாக தான் இருக்கும் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

விஜயகாந்த் சொன்ன ஒரு சொல்:

அதாவது ஜோதிகாவிற்கு அந்த திரைப்படத்தில் நடித்ததற்கு சம்பளம் பாக்கி இருந்தது. அந்த சம்பள பாக்கியை கொடுக்காமலேயே படத்தை வெளியிட இருந்தார் மாணிக்கம் நாராயணன். ஆனால் அப்போது நடந்த சில பிரச்சனைகள் காரணமாக ஜோதிகாவிற்கு சம்பளம் கொடுக்காமல் அந்த படம் வெளியாகாது என்கிற நிலை இருந்தது.

ஜோதிகாவால் தடைப்பட்டு நின்ற திரைப்படம்.. விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை... நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்!.

இந்த நிலையில் அந்த சம்பளத்தை செக் போட்டு எழுதி அதை விஜயகாந்திடம் கொடுத்து இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றார் மாணிக்கம் நாராயணன். அதன்படி விஜயகாந்த்தும் ஜோதிகாவின் மேனேஜரை அழைத்து அந்த செக்கை கொடுத்து இருக்கிறார்.

ஆனால் அதை வாங்க மறுத்த மேனேஜர் செக்கை எப்படி நம்பி வாங்குவது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த் மாணிக்கம் நாராயணன் ஒரு செக் எழுதிக் கொடுக்கிறார் என்றால் அது ரிசர்வ் பேங்கில் கொடுத்த மாதிரி. பயப்படாமல் வாங்கிக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். அந்த ஒரு வார்த்தை என்னை மிகவும் நெகிழ செய்தது. எனக்கு எவ்வளவு பெரிய மரியாதையை விஜயகாந்த் கொடுத்தார் என்று தெரிந்து கொண்டேன் என்று இது குறித்து மாணிக்கம் நாராயணன் கூறுகிறார்.