ரிலீஸ் நேரத்தில் வந்த பிரச்சனை.. பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்..!

பொன்னியின் செல்வன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை கனடாவிலும் முளைத்திருக்கிறது. இந்த பிரச்சனையை தாண்டி இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா என்ற சர்ச்சைகள் தற்போது எழுந்துள்ளது.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்கனவே தமிழகத்தில் நடிகர் விஜய் நடித்த தெறி, புலி போன்ற படங்களில் ஏற்பட்டது. அது போலவே சீயான் விக்ரம் நடித்த படத்தில் மகான் படத்துக்கும் ஏற்பட்டது.

இதற்குக் காரணம்  படம் முடிக்கப்பட்ட தருவாயில் படத்தை வெளியிடுவதற்காக வினியோகஸ்தர்கள் அவசியம் தேவை இந்த விநியோகஸ்தர்கள் கைதூக்கி போகும்போது அங்கு புதிய விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கும்போது பழைய விநியோகஸ்தர்களுக்கும் புதிய விநியோகஸ்தர்களுக்கும் ஏற்படக்கூடிய கடும் போட்டிகள் தான் இந்த படத்திற்குசிக்கலாக மாறியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள ஒரு புனிதத் என்ற புதிய விநியோகிஸ்தர் வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து பழைய வினியோகிக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருப்பதால் தமிழ் திரை காவியமான பொன்னியின் செல்வன் சுமூகமாக ரிலீஸ் ஆகுமா..? என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

இந்நிலையில், படக்குழு எந்த விதமான சர்ச்சையும் ஆபத்தும் இல்லாமல் படத்தை ஓட்டுவதற்கான முக்கிய பணிகளை முழுவீச்சில் செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.

எனினும் பலருக்கு சந்தேகம் மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை நிச்சயமாக இந்த சங்கடத்தைத் தவிர்க்க ஏதாவது ஒரு வழியை பயன்படுத்தி இடத்தை சீரும் சிறப்புமாக அங்கு வெளியிடுவார்கள் என்று மற்ற தரப்பில் உள்ள சிலர் கூறி வருகிறார்கள்.

கனடாவிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது எனவே நிச்சயமாக படம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடிவாங்காமல் சாதனை படைக்கும் என்றுதான் ரசிகர்கள் கூறுகிறார்கள்.எனவே கனடாவில் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் பொன்னியின் செல்வன் கொடி விண் உயர பறக்கும்.