பொன்னியின் செல்வன் ரன்னிங் டைம் இது தான்..! – வெளியான தகவல்..!

கல்கி எழுதிய நாவலைத் தழுவிய  பொன்னியின் செல்வன்  படத்தை இயக்கிய மணிரத்தினம்  இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாக செய்திகள் வந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். நாவலின் ஒவ்வொரு கேரக்டரையும் ஏன் நாம் ஒரு படமாக எடுக்க கூடிய நிலையில் மணிரத்தினம் மிக நேர்த்தியாக சுருக்கமாக ஒவ்வொரு கேரக்டரையும் திறமையாக கையாண்டு இரண்டு பாகங்களாக பிரித்து முதல் பாகத்தை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர இருக்கிறார்.

இதற்காக அனைத்து கட்ட வேலைகளும் முழுவீச்சில் நடந்து வரும் வேளையில் இந்த படத்திற்காக சென்சார் யு/ஏ  சான்றிதழை அளித்து உள்ளதோடு படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் ஆகும்.

 சமீபத்தில் வெளிவந்த வலிமை மற்றும் கோப்ரா படங்களின்  ரன்னிங் டைம் அதிகமாக இருந்ததன் காரணமாக ரசிகர்கள் அந்த படத்தை யாரும் விரும்பாமல் தோல்வியைச் சந்தித்தது. மேலும் அதிக நேரம் அமர்ந்து படத்தை பார்ப்பதற்கு யாரும் தற்போது விரும்பவில்லை. எனவே இந்த படத்திலும் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால் இந்த சங்கடத்தை  ரசிகர்களை சந்திக்க நேரிடுவார்களா? என்பது போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் மணிரத்னத்திடம் கேட்டார்கள்.

இதனை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மணிரத்தினம் செய்தியாளர்களிடம் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படமானது 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடியுள்ளது. இந்தப் படம் மாபெரும் வெற்றியையும், வசூலையும் குவித்து உள்ளது .

அப்படி இருக்கும்போது ரன்னிங் டைம் அதிகமான இந்தப் படத்தை அவர்கள் வெற்றியடைய செய்தார்கள் என்றால் அதற்கு பக்கபலமாக இருந்தது கதையம்சம் மற்றும் காட்சிகளை நகர்த்திய விதம் தான். எனவே சிறந்த கதை அம்சத்தோடு விறுவிறுப்பான நகர்வு திரைப்படத்தில் இருந்தால் வெற்றி சாத்தியமானது. ஆண்டவரே வழியை காட்டி விட்டார் இதற்கு மேல் நமக்கு என்ன வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

---- Advertisement ----

எனவே கண்டிப்பாக வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளிவர கூடிய பொன்னியின் செல்வனும் மாபெரும் வெற்றியை பெறும். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் கன்ஃபார்ம் சக்சஸ்… என்ற ரீதியில் கூறியிருக்கிறார்.

---- Advertisement ----