ஏலம் விடுவதற்கு தயாராக இருக்கும் பொன்னியின் செல்வன் பொருட்கள்..! – என்னென்ன பொருட்கள் என பாருங்க..!

மிகப்பெரிய சோழர்  சாம்ராஜ்ஜியத்தில் மிக முக்கியமான  கேரக்டர்களாக திகழ்ந்த குந்தவையான திரிஷா மற்றும் நந்தினி யான ஐஸ்வர்யா ராயின் நகைகள் விரைவில் ஏலத்தில் வர இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த நகைகள் அச்சு அசலாக சோழர் காலத்து நகைகளை போல் உள்ளதால் இதை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

 மணிரத்னத்தின் இயக்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளிவரக்கூடிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தப்பட்ட நகைகள்தான் இவை இந்த நகைகள் அனைத்தும் ஐம்பொன்  மற்றும் சில தங்கத்தால் ஆனது.

 இந்த நகைகளை வாங்குவதற்கு தான் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருக்கக்கூடிய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நகைகள் அனைத்தும்   அக்காலத்தில் ராணிகள் பயன்படுத்தியது போலவே இருப்பதால் பெண்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 மேலும் இது போன்ற பண்டைய நகைகளை சேர்த்து வைக்கக் கூடிய நிறுவனங்களும்,பண்டைய பொருட்களை சேர்த்து வைக்கக் கூடிய எண்ணமுள்ள மக்களும் இது போன்ற கலை பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதோடு அது என்ன விலையாக இருந்தாலும் வாங்க வேண்டும் என்பதை வாழ் நாள் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

 அவர்களுக்கு இந்த சோழர்காலத்தில் நகைகளை எப்படி செய்தார்கள் என்பது போன்ற விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருந்து அந்த நகைகளை இவர்கள் உடனடியாக வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பதால் இந்த ஏலம் அவர்களுக்கு மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கும். மேலும் இந்த நகைகள் பல கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் எடுப்பார்கள் என்று படக்குழு கருதி வருகிறார்கள்.

மிகவும் நேர்த்தியுடன் செய்யப்பட்ட இந்த தங்க நகைகளை அந்த காலத்து பத்மினி ராகினி போன்றோர் அணிந்த புடவை நகைகளை வாங்கியது போல ரசிகர்கள் வாங்க துடித்து வருகிறார்கள். எனவே சோழர் காலத்து நகைகள் என்ற பெயரில்  இளவரசிகளின் நகைகள் விரைவில் ஏலத்தில் விடப்படும் என்பது இப்போது ஊர்ஜிதமாகி உள்ளதால் அனைவரும் இதனை வாங்குவதற்கு ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …