“கிரிஸ்பியான முட்டை பக்கோடா..! – வேற லெவல் நீங்களும் செய்யலாம்..!

மாலை நேரத்தில் டீ, காபி பருகும் போது ஏதாவது ஒரு குறுந்தீனியை சாப்பிட்டால் தான் நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அதற்கு ஏற்ற ரைட் சாய்ஸாக இந்த கிரிஸாபியான முட்டை பக்கோடா சாப்பிட்டால் இதன் சுவையை உங்களை அள்ளிச் சென்று விடும்.

அது மட்டுமல்லாமல் மீண்டும், மீண்டும் இதை சுவைக்க உங்களுக்கு தோன்றும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மொறு மொறுப்பான முட்டை பக்கோடாவை விரும்பி சாப்பிடுவார்கள்.

Egg pakoda

அப்படிப்பட்ட முட்டை பக்கோடாவை எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பற்றி இந்த சமையல் பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முட்டை பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

1.வேகவைத்த முட்டை பத்து

2.நான்கு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு

---- Advertisement ----

3.நான்கு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

4.கறி மசாலாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன்

5.மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்

6.இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்

7.உப்பு தேவையான அளவு

8.பொரித்தெடுக்க எண்ணெய் அரை லிட்டர்

Egg pakoda

செய்முறை

முதலில் முட்டையை வேக வைத்து கழுவி தோலை உரித்து கொள்ள வேண்டும். இதனை அடுத்து ஒரு பெரிய பவுலில் நீங்கள் கார்ன்ஃப்ளார் மாவு, அரிசி மாவு, கறி மசாலா தூள், மிளகாய் தூள், பூண்டு இஞ்சி விழுது, இவற்றை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

Egg pakoda

பிறகு இந்த கலவைக்கு தேவையான அளவு உப்பினை சேர்த்து வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டிக்கொண்டு மஞ்சள் கருவை தனியாக எடுத்துவிட்டு, வெள்ளை கருவை மட்டும் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி இந்த மாவினுள் போட்டு விடுங்கள்.

பிறகு முட்டையின் வெள்ளை கருவும், மாவும் நன்கு கலக்கும்படி உங்கள் கைகளால் கிளறி விடுங்கள். மேலும் இந்த முறைகளை நீங்கள் முடித்து விட்டீர்கள் என்றால் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.

Egg pakoda

எண்ணெய் நன்கு சூடான பிறகு நீங்கள் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொறித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான வித்தியாசமான மொறு, மொறு முட்டை பக்கோடா ரெடி.

---- Advertisement ----