பணத்திற்காக நான் பார்த்த வித்தியாசமான வேலை..! – ராஷி கண்ணா ஓப்பன் டாக்..!

இளம் நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் உங்களுடைய இதயத்தை உடைக்கும் படி உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ஏதாவது ஒன்றை கூற முடியுமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை ராஷி கண்ணா, ஒரு பெண்ணாக ஆண் நண்பரை வைத்திருப்பது என்பது ஒரு கடினமான விஷயம். ஆனால், அந்த ஆண் நண்பரை பிரியும்போது ஏற்படக்கூடிய வலி மிக மோசமானது. அதை நான் அனுபவித்து இருக்கிறேன்.

சில விஷயங்களை வெளியே வெளிப்படையாக கூற முடியாது. காதலால் தான் எனக்கு இதயம் உடையும் அளவுக்கு வலி ஏற்பட்டது என பதிவு செய்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் பணத்திற்காக நீங்கள் செய்த வித்தியாசமான வேலை ஏதாவது இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு முதலில் பதில் அளித்து நடிகை ராஷி கண்ணா, பணத்திற்காக வித்தியாசமான வேலை எதுவும் நான் செய்தது கிடையாது என்று இழுத்தபடியே.. விட்டத்தை பார்த்து.. ஆம், செய்திருக்கிறேன் என்று கூறினார்.

என்ன வேலை..? என்று கேட்டதற்கு நான் என்னுடைய கைகளை மட்டும் மாடலிங் செய்தேன். அதாவது மோதிரம் வளையல் போன்றவற்றை என்னுடைய கையில் மாட்டி போட்டோஸ் எடுப்பார்கள்.

என்னுடைய கைக்கு மட்டும் தான் அங்கே வேலை. நான் மேக்கப் கூட போட்டிருக்க மாட்டேன். என்னுடைய கைகளில் மட்டும் மோதிரங்கள் வளையல்கள் ஆகியவற்றை மாட்டி போட்டோ ஷூட்  செய்வார்கள். அப்போது எனக்கு வயது 17 தான்.

அதன் பிறகு மெல்ல மெல்ல மாடலங்கில் அதிக ஈடுபாடு வந்தது. அதன் பிறகு நடிகையாக வாய்ப்பு கிடைத்தது என பேசி இருக்கிறார் நடிகை ராஷி கண்ணா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …