கணவரை பிரிந்து தனியாக வாழும் ரச்சிதா மகாலட்சுமி..! – அதிர வைக்கும் காரணம்..!

சின்னத்திரையில் பிரபல நடிகையாக சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. கடந்த ஓராண்டுக்கு மேலாக தன்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்வதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி. இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி தொடர் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது சரவணன் மீனாட்சி சீசன் 1 2 3 என அனைத்து சீசன்களிலும் இவர் ஹீரோயினாக நடித்தார்.

ஹீரோக்கள் மாறியபோதும் ஹீரோயின் மாறவே இல்லை. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவரும் கணவன் மனைவி சகிதமாக நாச்சியார் என்ற சீரியலில் நடித்த பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் ஒரு ஆண்டு மட்டும் நடித்தார் மகாலட்சுமி.

இந்நிலையில் தன்னுடைய காதல் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிப்புதான் வாழ்க்கை என வாழ்ந்து வரும் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி கணவரிடமிருந்து விவாகரத்து பெறாமல் கடந்த ஒரு வருடமாக அவரை பிரிந்து தனியாக இருக்கிறார் தனிமையில் வாடுகிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வரும் இவர் கணவரை இழந்த ஒரு பெண் குழந்தையை வளர்க்க எப்படி எல்லாம் போராடுகிறாள் என்பதை கருவாக கொண்டு இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தை குறிப்பிட்டு தன்னுடைய வாழ்க்கையை போலவே இந்த கதாபாத்திரம் உள்ளது என்றும் தனிமை எனக்கு மன வேதனையை தருகிறது அதை எதிர்கொள்ளக்கூடிய துணிவும் தைரியமும் எனக்கு இருக்கின்றது என்று இலை மறை காய் மறையாக தான் தனியாக வசித்து வருவதை சூசகமாக பதிவு செய்துள்ளார் ரச்சித்தா மகாலட்சுமி.

திருமணம் ஆகி வருடங்கள் கடந்த போதும் குழந்தை இல்லாதது தான் இந்த நட்சத்திர தம்பதியின் பிரிவுக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரச்சித்தா மகாலட்சுமி கடந்த ஓராண்டு காலமாக தனியாகவே போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது இந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்கி உள்ளது.

இதுகுறித்து நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்ன கூற போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். தொடர்ந்து இது போன்ற சுவாரசியமான சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …