Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Rachitha Mahalakshmi

“அம்மாடி.. உன் அழகு செம தூளு..” – பால்கனியில் பால்கோவா போல நிற்கும் ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi )  பார்த்தவுடன் மனதில் ஒட்டிக்கொள்கிற ஒரு முக வடிவழகி. பிரபலமான சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பெயருடன் இருக்கிறார்.

சரவணன் மீனாட்சி தொடரில் ரக்சிதா நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் சொல்வதுண்டு. பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக ஆக இருந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

Rachitha Mahalakshmi

பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஏனெனில், இவரது குடும்ப குத்துவிளக்கு தோற்றம், எல்லா படங்களுக்கும் பொருந்தாது என்பதுதான்.

Rachitha Mahalakshmi

இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர். நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது, தனது பெற்றோருடன் ரக்சிதா வசித்து வருகிறார்.

Rachitha Mahalakshmi

சினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற வகையில், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார் ரக்சிதா. பெண் போட்டியாளர்களில் டாப் அழகியாக, பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார். பல்வேறு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்துகொண்டாலும், வீட்டுக்குள் நடந்த சண்டை சச்சரவுகளில் சிக்கிக்கொள்ளாமல் அமைதி காத்தார்.

--Advertisement--

Rachitha Mahalakshmi

இதை, சக போட்டியாளர்களே, அவரை கிண்டல் செய்தனர். மேலும், அவரது அழகான, எடுப்பான மூக்கில் மூக்குத்தி குத்தியிருந்ததால் அவரை மூக்குத்தி என நிக் நேம் வைத்து அழைத்தனர். அவரது பெயர் சரியாக தெரியாதவர்கள் கூட, மூக்குத்தி தான் அவரது பெயரோ என்று எண்ணும் அளவுக்கு அந்த பெயரை, இந்த சீசனில் பிரபலப்படுத்தி விட்டனர்.

Rachitha Mahalakshmi

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர், இவர் மீது காதல் கொண்டு பின்னாலேயே சுற்றித் திரிந்தார். அவரை காதலிப்பதாகவும் ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார். ஆனால், ரக்சிதா அசைந்து கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், அவர் கதறி கதறி அழுததைப் பார்த்து ஆறுதல் சொன்னார் ரக்சிதா. இதுவெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வைரலாக பரவியது. ராபர்ட் மாஸ்டர்தான், மூக்குத்தி என்ற பட்டப்பெயரை ரக்சிதாவுக்கு அளித்தது.

Rachitha Mahalakshmi

ரக்சிதா, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். குறிப்பாக, மாடல் ஆடைகளை காட்டிலும், ரக்சிதா முக அழகு, உடல்வாகு தோற்றத்துக்கு புடவை அம்சமாக அமைகிறது.

Rachitha Mahalakshmi

அந்த வகையில், புடவை கட்டிய அழகு புயலாக, இன்ஸ்டாகிராமில் காட்சியளிக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன. ஆனால், அவ்வப்போது மாடர்ன் டிரஸ்களிலும் அம்மணி போட்டோஸ் அப்டேட் செய்கிறார். அ;ந்த வகையில் அவரது இந்த புகைப்படங்களை பாருங்க…பார்த்துக்கிட்டே இருப்பீங்க.

Continue Reading
 

More in

Trending Now

To Top