இப்போ ஹீரோயினா இருந்திருந்தா.. இந்த நடிகருடன் ரொமான்ஸ் பண்ணுவேன்..! – நடிகை ராதா ஓப்பன் டாக்..!

இப்போது ஹீரோயினாக இருந்தால் இந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய ஆசைப்படுவேன் என நடிகை ராதா கூறியுள்ளார்.

இவர், குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. 80-களில் முன்னணி நடிகையாக பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர்.

தற்பொழுது இவருக்கு 58 வயது ஆகிறது. தமிழில் சாந்தி எனது சாந்தி என்ற திரைப்படத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு கடைசியாக நடித்திருந்தார்.

தமிழில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1991-ம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6, 7, 8, 9-களில் நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றார்.

சினிமா நடிகையாக மட்டும் இல்லாமல் தோல் நல்ல தொழிலதிபராகவும் இருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் உதயா சந்திரிகா என்பது ஆகும்.

சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட நடிகை ராதா தற்போது நீங்கள் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தால் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ரா,தா இப்போது ஹீரோயினாக இருந்தால் அஜித்துடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. நடிகர் கார்த்தி மீது எனக்கு கிரஷ் கிடையாது. ஆனால், அவருடைய நடிப்பு அவருடைய கதை தேர்வுகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.

அதனால் கண்டிப்பாக கார்த்தி உடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவேன். அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய நடிப்புக்கு நிகராக நானும் நடிக்க ஆசைப்படுவேன்.

இப்படி நிறைய நடிகர்களை சொல்லலாம் என கூறியிருக்கிறார் நடிகை ராதா. இவருடைய மகள்களான கார்த்திகா மற்றும் துளசி நாயுர் என இருவருமே தமிழ் சினிமாவில் நடிகைகளாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

ரம்பா என்ன பெரிய்ய்ய்ய ரம்பா.. என்னோட தொடையை பாருங்க.. குட்டியூண்டு ட்ரவுசரில் VJ அஞ்சனா..!

தொகுப்பாளனி VJ அஞ்சனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. கருப்பு நிற ட்ரவுசர், தொலைதொள டீசர்ட் என …