கணவரின் முதல் மனைவியோடு சேர்ந்து கொண்டு ராதிகா கேட்ட ஒரு கேள்வி..! – அதிர்ந்து போன சரத்குமார்..!

நடிகர் சரத்குமார் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த நடிகர் சரத்குமார் கடந்த 2000 ஆம் ஆண்டு ராதிகா சரத்குமார் உடன் இருந்த தொடர்பு காரணமாக சாயாவை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2001-ம் ஆண்டு ராதிகா-வை திருமணம்  திருமணம் செய்து கொண்டார் சரத்குமார்.

சாயாவுக்கும் சரத்குமாருக்கும் பிறந்த மகள் தான் வரலட்சுமி. திருமணமான நாள் முதல் தற்போது வரை சாயாவும் ராதிகாவும் நேருக்கு நேர் பேசிக் கொண்டதே கிடையாதாம்.

ஆனால் நடிகர் சரத்குமாரின் படப்பிடிப்பு தளத்திற்கு இருவரும் ஜோடியாக வந்து ஒரு கேள்வியை அவரிடம் எழுப்பி இருக்கிறார்கள். அதனை கேட்ட சரத்குமார் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

அது என்ன கேள்வி..? என்பது குறித்த பதிவு தான் இது. நடிகை வரலட்சுமி  சினிமாவில் நடிக்க இருப்பதாக அவருடைய தாய் சாயா-விடம் கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அப்பாவை கேட்காமல் எதுவும் செய்யாதே என்று கூறியிருக்கிறார் சாயா. எனவே, தன்னுடைய தந்தையிடம் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று அனுமதி கேட்டு இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

ஆனால் நடிகர் சரத்குமார் சினிமா-வா.. அதேல்லாம ஒன்னும் வேண்டாம்.. என்று அதனை மறுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை ராதிகாவும் சாயாவும் ஒன்றாக சேர்ந்து சரத்குமாரின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று, ஏன் வரலட்சுமி நடிக்க கூடாது..? நடித்தால் என்ன..? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

அதன் பிறகு சில நெறிமுறைகளோடு, கட்டுப்பாடுகளோடு படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் சரத்குமார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …