Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்களுக்கு வெக்கமே இல்லையா.. ராதிகாவை திட்டிய நடிகை தனுஷ்.. என்ன ஆனது..?

Tamil Cinema News

உங்களுக்கு வெக்கமே இல்லையா.. ராதிகாவை திட்டிய நடிகை தனுஷ்.. என்ன ஆனது..?

நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகளாகிய நடிகை ராதிகா வாரிசு நடிகை என்பதால் திரையுலகில் என்று என்பது எளிமையாக அமைந்தது. இவர் இயக்குனர் பாரதிராஜாவால் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

நடிகவேளை போலவே நடிப்பில் நல்ல பெயரை பெற்ற ராதிகா பன்முகச் திறமையை கொண்ட நடிகை. பெரிய திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சீரியல்களில் நடித்து சாதித்திருக்கிறார்.


நடிகை ராதிகா..

எனினும் இவரது திருமண வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்தித்த போதும் நடிகர் சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தற்போது சினிமாவிலும் பிஸியாக இருக்கிறார்.

சமூக ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி தந்த நடிகை ராதிகா தனுஷ் தன்னை போன் செய்து திட்டியதாக அந்த பேட்டியில் கூறியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராதிகா என்ன செய்தார் எதற்காக ராதிகாவை தனுஷ் திட்டினார் என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் அந்த விஷயத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

--Advertisement--

ராதிகாவை திட்டிய தனுஷ்..

நடிகை ராதிகா தமிழில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து டாப் நடிகையாக இருந்தவர். ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

50 வயதை தொட்டிருக்கும் நடிகை ராதிகா ஹீரோயினி வாய்ப்பு குறைந்ததை அடுத்து குண சித்திர வேடங்களில் கவனத்தை செலுத்தி நடித்திருக்கிறார். அந்த வகையில் சூரிய வம்சம், நானும் ரவுடிதான் போன்ற படங்களில் அபார நடிப்பை வெளிப்படுத்திய இவர் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.


சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என்ற சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் ஒருநாள் தனுஷ் தனக்கு போன் செய்தார். அப்போது அவரிடம் அக்கா விஷயம் தெரியுமா? விக்னேஷ் சிவனும் நயனும் காதலிக்கிறார்கள். விரைவில் கல்யாணம் செய்யப் போகிறார்கள் என்று சொன்னார்.
என்ன விஷயம் தெரியுமா?

அதற்கு நான் என்னடா சொல்ற விளையாடாத இப்பதான் அவங்களோட ஷூட்டிங் முடிச்சுகிட்டு நான் வந்தேன் என்று சொல்ல தனுஷ் உங்களுக்கு வெக்கமா இல்லையா? பெரிய நடிகைன்னு சொல்லி இருக்கீங்க.. இது கூடவா உங்களால கண்டுபிடிக்க முடியவில்லை என்று கலாய்த்து தள்ளினார்.


அத்தோடு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் நானும் ரவுடிதான் ஷூட்டிங்கில் அவர்கள் காதலிப்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த இடத்தில் இருவரும் அவர்கள் பணியில் மட்டும்தான் கவனத்தை செலுத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது எப்படி இந்த விஷயம் நடந்தது என்று என்னால் இன்று வரை யூகிக்க முடியவில்லை.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக விட்டதோடு இதற்கு தான் தனுஷ் ராதிகாவை திட்டினாரா.. என்று ரசிகர்கள் அனைவரும். பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சூர்யாவுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம்.. ஜோதிகாவை பார்த்துட்டு எனக்கு பேச்சே வரல.. சாய்பல்லவி ஓப்பன் டாக்..

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top