திருமணத்திற்கு பிறகும் அடங்காத கவர்ச்சி.. ப்ராவை தூக்கி பிடித்து ராகுல் ப்ரீத் சிங் படு மோசமான போஸ்..!

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என்று தென்னிந்தியாவில் உள்ள பழமொழிகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங் முதன்முதலாக கன்னடத்தில் வெளியான கில்லி என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. அதனை தொடர்ந்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தடையறத் தாக்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் கதாநாயகியாக அவர் முதன் முதலாக தமிழில் நடித்த திரைப்படம் என்னமோ ஏதோ என்கிற திரைப்படம்தான்.

கதாநாயகியாக எண்ட்ரி:

அந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் தமிழில் அவருக்கு ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று.

அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக ரகுல் ப்ரீத் சிங் மாறினார். அதனை தொடர்ந்து நிறைய தமிழ் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழை விடவும் தெலுங்கில்தான் அதிகமான திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

மார்க்கெட் இழப்பு:

அதற்குப் பிறகு இவர் நடித்த தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் அந்த  படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்காமல் போனது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க தொடங்கினார் ராகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வாய்ப்புகளை தேடத் துவங்கினார். அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டு சுத்தமாக மார்க்கெட்டை இழந்தார் ரகுல். அவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு ஒரே ஒரு ஹிந்தி திரைப்படம் மட்டும்தான் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரகுல் பிரீத் சிங்.

---- Advertisement ----