படம் வெற்றியடைந்தால் கட்டாயம் இந்த இடத்தில்தான் வெற்றி விழா- ராஜமவுலி பேச்சு!

பான் இந்தியா படமாக தயாரிக்கப்பட்டு வரும்  பிரம்மாஸ்திரம் படத்தின் புரமோஷன் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்  வைத்து மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்  இயக்குனர் ராஜமவுலி.

 ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக அவர் கனவு தகர்ந்து விட்டது. விநாயகர் சதுர்த்தியை  காரணமாக காட்டி அந்தப் விழாவிற்கு கிடைத்த  அனுமதியை போலீசார் ரத்து செய்து விட்டனர்.

பாலிவுட்டில், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பல  முன்னணி நடிகர்கள் நடித்த இந்தப் படத்தை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திரையிட திட்டமிட்டு இருந்தார்கள்.

 எனவே பிரம்மாஸ்திரம் படத்தின் குழுவினர் பல்வேறு பகுதிகளில் என்ற படத்திற்கான பிரமோஷன் வேலைகளை மிகவும் துரிதமான முறையில் செய்து வருகிறார்கள்.

ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு ஹோட்டலிலிருந்து செய்தியாளர்களுக்கு அளித்த செய்திகள் தான் மிகவும் கனவுடன் காத்திருந்த அந்த கனவு தற்போது பலிக்கவில்லை என்றும், எனினும் அந்த கனவை நிச்சயமாக வெற்றி விழாவில் அதே இடத்தில் வைத்து நான் நினைத்தபடி நடத்துவேன் என்று கூறியிருக்கிறார்.

---- Advertisement ----

இந்தப்படத்தில் படத்தின் நாயகன்  தன்னுடைய சக்திகளை பயன்படுத்தி தீயை வானத்தை நோக்கி எரிவது போல காட்சி அமைத்து இருப்பேன். அந்த நிகழ்வினை உண்மையாக  உங்கள் முன் செய்துகாட்ட திட்டமிட்டிருந்தேன். மேலும் அவ்வாறு செய்யும்போது மிகப்பெரிய வானவேடிக்கை களோடு உங்களை கவர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இந்த எண்ணம் நிச்சயமாக பட வெற்றி விழாவில்  கண்டிப்பாக அதே இடத்தில் வைத்து நிகழும் என்று உறுதியாக நினைக்கிறேன் என்றார்.

 நானும் ரசிகர்களோடு ஒன்றாக அமர்ந்து இந்த நிகழ்வினை காண்பதற்காக காத்து இருக்கிறேன் என்று பதில் அளித்தார். நீங்களும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விரைவில் பிரம்மாண்டமாக நிகழ இருக்கும் பிரம்மாஸ்திரம் பட வெற்றி விழாவில் கலந்து கொள்ள தயாராக இருங்கள் என ரசிகர்களுக்கு இவர்கள் மனதை ஈர்க்கும் வகையில் பேசினார்.

---- Advertisement ----