கவர்னர் ஆகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..? – அதுவும் இந்த மாநிலத்துக்கா…? – உண்மை என்ன..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் கவர்னர் பதவி கிடைக்க உள்ளது என்றும் எந்த மாநிலத்திற்கு கவர்னராகிறார் ரஜினிகாந்த் என்றும் சில தகவல்கள் அரசல் புரசலாக அரசியல் வட்டாரத்திலும் இணைய பக்கங்களிலும் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் 90 களிலேயே அரசியலில் பிரவேசம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது நாள் வரை அரசியலில் நுழையாமல் இருந்து வருகிறார்.

ஆனால் தன்னுடைய அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதில் எந்த தயக்கமும் காட்டாதவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக சில கருத்துக்களை மறைமுகமாக பேசி வருகிறார் ரஜினிகாந்த்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு 10 பேர் சேர்ந்து ஒருவனை எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நேரடியாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசி இருந்தார் ரஜினிகாந்த்.

மேலும் இந்திய அரசியலில் மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் ராமர் அர்ஜுனன் போன்றவர்கள் என பேசி இருந்தார். சமீபத்தில் கூட உத்திரபிரதேசம் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

வயதின் அடிப்படையில் யோகி ஆதித்யநாத் நடிகர் ரஜினிகாந்த் விட மிகவும் சிறியவர். வயதின் சிறியவர்கள் காலில் விழக்கூடாது என ரஜினியே பேசிஇருந்தார். ஆனால் அவர் காலில் விழுவது என்பது என்ன மாதிரியான மனநிலை என ரஜினிகாந்த்-ஐ கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள் ஒரு தரப்பினர்.

ஆனால், யோகிகள் முனிவர்கள் அவர்களுக்கெல்லாம் வயது ஒரு பொருட்டே கிடையாது. அவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள். எதன் மீதும் பற்று இல்லாதவர்கள். நாட்டு மக்களின் நலனை மட்டுமே சிந்திக்க கூடியவர்கள் அவர்கள் காலில் விழுந்து வணங்குவது என்னுடைய பழக்கம் என இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தான் அரசியலில் இல்லாவிட்டாலும் கூட ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கு பின்னாலும் நடிகர் ரஜினிகாந்தின் கருத்து என்ன அறிந்து கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு கவர்னர் பதவி கொடுக்க இந்திய அரசு தரப்பில் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கு இசைவு தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்திலும் இணைய வட்டாரத்திலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் அல்லது கர்நாடக மாநிலத்தின் கவர்னராக நடிகர் ரஜினிகாந்த் பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். இந்த தகவல் உண்மைதானா..? அல்லது வதந்தியா.? என்பது நடிகர் ரஜினிகாந்த் அல்லது இந்திய அரசு சார்பில் ஏதேனும் தகவல்கள் வெளியானால் மட்டுமே உறுதிப்பட சொல்ல முடியும்.

தற்போது வரை இதை ஒரு வதந்தியாக மட்டுமே பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …