வித்தியாசமான கெட்டப்பில் ரஜினிகாந்த..! – தீயாய் பரவும் “ஜெய்லர்” படப்பிடிப்பு தள புகைப்படம்.!

 சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் மனசில் சூப்பராக நிலைத்து நின்றிருக்கும் சூப்பர்ஸ்டாரின்  ஜெய்லர் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

 இந்தப் படத்தை  இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் இயக்கிவருகிறார்.இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஜெய்லர் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான திரைக்கதையை கே.எஸ் ரவிக்குமார் எழுதியிருக்க  படத்தில் பிரியங்கா அருள் மோகன் ரம்யா கிருஷ்ணன் ஐஸ்வர்யாராய் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தை நெல்சன் தீலிப்குமார் தான் இயக்கி இருந்தார். இந்த படம் சரியாக ஓடவில்லை. அதேபோலவே தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் கடுமையான தோல்வியை சந்தித்தது. தன்னுடைய நிலையை உறுதி செய்வதற்கான படமாக இந்தப் படம் இருக்கும். எனவே அது நிமித்தமாக மிகவும் கடுமையான உழைப்பில்  தீலிப் குமார் இயக்கி வருகிறார்.

 இந்த படத்தில் கட்டாயம் வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டத்தில் இருக்கக்கூடிய நெல்சன்.இவரைப்போலவே ரஜினியின் ரசிகர்கள் இந்த படமாவது சூப்பர் டூப்பர் ஹிட் தலைவருக்கு கொடுக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள்.

 இதனையடுத்து தற்போது படப்பிடிப்பு தளத்தில் ரஜினி  வித்தியாசமான கெட்டப்பில் காட்சி அளித்திருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கலக்கும் விதத்தில் இருந்தது அது போல திடீரென்று ஜெய் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது இதனை அடுத்து ஜெயிலர் படப்பிடிப்பு பற்றிய ஆவல் அதிகரித்துள்ளது.

 தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் நடக்கும் என தெரியவந்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …